கோடை காலம் கொடுக்கிற வரங்கள்ல ‘மாம்பழமும்’ ஒண்ணு. தமிழ்நாட்டுல மாம்பழம்னு சொன்னா, சேலம் தான் நினைவுக்கு வரும். சேலத்துக்கு ‘மாங்கனி’ நகரம்’னே ஒரு பேரு உண்டு.
சேலம் மாவட்டம் ஒரு காலத்துல தர்மபுரி, கிருஷ்ணகிரினு பரந்து விரிஞ்சி இருந்ததுதான் காரணம். சேலம் தொடங்கி கிருஷ்ணகிரி வரையிலும் மம்பழத் தோட்டங்களா பரவி இருக்கு. ஒப்பீட்டு அளவுல தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்துல மாம்பழ சாகுபடியோட பரப்பளவு அதிகம். ஆனா, சேலம் பகுதியில விளையுற மாம்பழம்தான் சுவையில முதலிடத்துல நிக்குது.
சேலம் பகுதியில மாம்பழங்க நேரடியா சாப்பிடறதுக்கு ஏத்தது. தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதியில விளையுற மாம்பழங்களை பெரும்பாலும் பழக்கூழ் தயாரிக்கத்தான் பயன்படுத்த முடியும்.
ஒவ்வொரு வருஷமும், இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையில ‘மேங்கோ டிப்ள்மசி’ னு ஒரு நிகழ்ச்சி நடக்கும். அதாவது, பக்ரீத் பண்டிகை சமயத்துல, இந்த நிகழ்ச்சி நடக்கும். அப்போ பாகிஸ்தான் பிரதமர், இந்திய நாட்டு பிரதமருக்கு 10 கிலோ மாம்பழமும், ஜனாதிபதிக்கு 15 கிலோ மாம்பழமும் அழகான கூடையில வைச்சு அனுப்பி வைப்பாரு. பாகிஸ்தான் மாம்பழம்தான் சுவையில முதலிடத்துல இருக்கு…. சந்தையிலயும் கூட, இந்திய மாம்பழத்தை விட, பாகிஸ்தான் மாம்பழத்துக்குத்தான் வரவேற்பு அதிகம்.
நம்ம ஊர் மாம்பழத்தை சாப்பிட்டா சூடுனு சொல்லி, அமெரிக்காவுல இருந்து இறக்குமதியாகிற ஆப்பிள் ஆப்கன் அத்தினு சாப்பிடற மக்களும் இருக்கத்தான் செய்றாங்க.
மக்கள் வசிக்கிற பகுதியில ஒரு பருவத்துல விளையுற காய், கனிங்க அந்தப் பருவநிலையை, சமாளிக்கக் கூடியதா இருக்கும்.
அதனால, மாம்பழம் கிடைச்சா, மாம்பழத்தைச் சாப்பிடணும், கொய்யா பழம் கிடைச்சா கொய்யா சாப்பிடணும்னு தமிழ் மருத்துவம் சொல்லுது.
“மாம்பழத்தில் உள்ள சத்துக்கள் உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்கிறது. 11 ஆண்கள், 9 பெண்களுக்கு தினமும் 100 கிராம் மாம்பழத்தை மூன்று மாதங்களுக்கு கொடுத்து பரிசோதனை செய்து பார்த்தோம். அப்போது, அவர்களின் உடலில் குளுக்கோஸ் அளவு குறைந்திருந்தது.
பெண்கள் மார்பில் ஏற்படும் புற்று திசுக்கள் உருவாவது தடுக்கப்பட்டிருக்கு. மாம்பழத்துல இருக்கிற ஏ.சி, பி -6 போன்ற வைட்டமின்கள் ஆரோக்கியமாக இருக்க உதவுதுன்னு அமெரிக்காவுல இருக்கிற ‘ஃபெடரேசன் ஆஃப் அமெரிக்கன் சொசைட்டி ஃபார் எக்ஸ்பரீமென்டல் பயாலஜிங்’ கிற (Federation of american societies for experimental biology) அமைப்பு அறிவிச்சிருக்கு.