இயற்கை விவசாயத்துக்கு மாறின சிலவருடங்களில் மண்ணின் தன்மை மாற்றம் அடைஞ்சு வர்றதை கண்கூடா பார்க்கலாம்.
மண்ணுல மண்புழுக்கள் நிறைய இருந்தா அது விவசாய மண். இல்லனா அது விஷ மண்.,
கரும்பு!
தோகை அடர்த்தியாகவும், நீளமாகவும் செழிப்புடனும் இருப்பதால், தண்டு ஊக்கமுடன் ஒரே சீராக வளர்ந்து நிற்கும், எடை அதிகரிப்பதால் மகசூல் கூடும், பிழிதிறன் கூடுதலாக கிடைப்பதால் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரை முதல்தர கட்டுமானத்துடன் இருக்கும்.
தென்னை!
ஈரியோஃபைட், வாடல் நோய் உள்ளிட்ட நோய்கள் நீங்கி, காய்கள் சீரான வளர்ச்சி அடையும். இளநீர் சுவையுடன் இருக்கும். முற்றிய தேங்காய்களின் கொப்பரைப் பருப்பு அடர்த்தியுடன் காணப்படும், கொப்பரை அதிக பிழிதிறனுடன் இருக்கும் என்பதால், கூடுதல் எண்ணெய் கிடைப்பதுடன், தரமான பிண்ணாக்கும் கிடைக்கும்.
மரவள்ளி!
மண் மெதுமெதுப்புடன் மாறி விடுவதால், கிளை விடும் வேர்கள் எளிதில் மண்ணில் ஊடுருவி அதிக கிழங்குகளைக் கொடுக்கும். தரமான அதிக எடையுள்ள கிழங்குகள் என்பதால் மகசூல் அதிகரிக்கும்.
பப்பாளி!
பெரியதும் ஒரே சீரானதுமான பழங்கள், நல்ல நிறத்துடன், அதிக சுவையுடன் இருக்கும்.
நெல்!
பதர் இல்லாமல் திடமான அரிசி கிடைக்கும். கூடுதலான வைக்கோல் பெறலாம். ருசியான உணவு சமைக்கலாம்.