M வடிவ கோழிக் கூண்டில் வளர்கோழிகள் மற்றும் முட்டைக் கோழிகளை வளர்க்கலாம். இரண்டு அடுக்குகளைக் கொண்ட இக்கூண்டில், மேல் அடுக்கில் வளர்கோழிகளையும், கீழ் அடுக்கில் முட்டைக் கோழிகளையும் வளர்க்கலாம்.
மேல் அடுக்கில் 8 கூண்டுகள் உள்ளது. ஒவ்வொரு கூண்டிலும் 9 முதல் 18 வார வயதுடைய 5 வளர்கோழிகள் வீதம் மொத்தம் 40 கோழிகளை வளர்க்கலாம்.
கீழ் அடுக்கில் 8 கூண்டுகள் உள்ளன. ஒவ்வொரு கூண்டிலும் 19 முதல் 72 வார வயதுடைய 4 முட்டைக் கோழிகள் வீதம், மொத்தம் 32 கோழிகளை வளர்க்கலாம்.
முட்டைக் கோழிக் கூண்டில் முட்டைகள் உடையாமல் இருப்பதற்காக பிளாஸ்டிக்கினால் ஆன வலை அமைப்பு, மடிக்காம்பு (நிப்பில்) குடிநீர் அமைப்பு மற்றும் தீவனத் தொட்டி பொருத்தப்பட்டு உள்ளது.
இவ்வகைக் கூண்டு அதிக தீவன இடவசதியும் நல்ல காற்றோட்ட வசதியும் கொடுக்கிறது. இதை எளிதில் எடுத்துச் சொல்லலாம்.
கிராமப்புறத்தில் கோழிகளை வளர்ப்பதற்கு ஏற்றது.