கம்பளிப் புழுக்களை ஒழிப்பது எப்படி?

First Published Jan 4, 2017, 12:46 PM IST
Highlights


ஒரு கிலோ வெள்ளத்தை சமபங்கு நீரில் நன்கு கரைத்துக் கொண்டு, அதில், ஒரு லிட்டர் காடி (வினிகர்), ஒரு லிட்டர் ரம் அல்லது விஸ்கி (40 % ஆல்கஹால்), 6 லிட்டர் தண்ணீர், ஒரு லிட்டர் இ.எம். ஆகியவற்றைச் சேர்த்து, காற்றுப் புகாத பிளாஸ்டிக் பாத்திரத்தில் ஒரு வார காலத்துக்கு மூடி வைத்தால், இ.எம்-5 கரைசல் தயார்.

இதிலும் தினமும் ஒரு வினாடி மூடியைத் திறந்து வாயுவை வெளியேற்றி வர வேண்டும் தயாரான திரவத்தைக் காற்றுப்புகாத பாத்திரத்தில் சேமித்து, மூன்று மாதங்கள் வரை பயன்படுத்தலாம். ஒரு மடங்கு இ.எம்.-5 திரவத்துடன், 200 மடங்கு தண்ணீரக் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம் (50 மில்லி கரைசலுக்கு 10 லிட்டர் தண்ணீர்). நோய்கள் கட்டுப்படும்வரை, இரண்டு நாட்கள் இடைவெளியில், தொடர்ந்து தெளிக்கலாம்.

இந்த இ.எம். தொழில்நுட்பத்தை முதன்முதலாக ஜப்பான் நாட்டில் கண்டுபிடித்தார்கள். ஜப்பான், கொரியா, தாய்லாந்து, மலேசியா…. ஆகிய நாடுகள் இ.எம். பயன்படுத்துவதில் முன்னிலையில் உள்ளன”.

“முருங்கையைக் குறித்து Trees for life (ட்ரீஸ் ஃபார் லைப்) எனும் அமெரிக்க அமைப்பு பிரமாதமாக     சொல்லியிருக்கிறது. முருங்கை இலையில் பாலாடையைவிட 2 பங்கு புரோட்டின், ஆரஞ்சை விட 7 மடங்கு வைட்டமின் -சி’, வாழைப்பழத்தை விட 3 மடங்கு பொட்டாசியம், கேரட்டை விட 4 மடங்கு வைட்டமின் – ஏ, பாலை விட 4 மடங்கு கால்சியம் உள்ளதாம்.

‘முருங்கையைத் தின்னா முன்னூறு வராது’ என்பது கிராமத்து மொழி. முருங்கையைத் தொடர்ந்து உணவில் பயன்படுத்துவோருக்கு 300 வகை வியாதிகள் அண்டவே அண்டாது என்பது தான் இதன் பொருள். இவ்வளவுசிறப்பான முருங்கை இலையைக் கடித்துக் குதறுவதுதான் கம்பளிப்புழு.

புதுத் துளிர் விடும்போதுதான் கம்பளிப் புழுக்களின் தாக்குதல் ஏற்படும். இவை, இரவு நேரத்தில் மரங்களில் உள்ள இலைகளைத் தின்னும். காலையில் வெயில் பட்டவுடன் அடிமரத்தில் வந்து கூட்டமாக சேர்ந்துவிடும். இந்த நேரத்தில் அவற்றைச் சேகரித்து, தீயிட்டு அழித்துவிடலாம். மண்ணெண்ணெய் அல்லது துணிசோப்புக் கரைசலை அவற்றின் மீது ஊற்றினால் இறந்து விடும். நான்கு பங்கு சாம்பலுடன் ஒரு பங்கு மிளகாய்த் தூள் கலந்தும் தூவி விடலாம். பூண்டு, இஞ்சி, மிளகாய்க் கரைசல் தெளித்தும் இதைக் கட்டுப்படுத்தலாம்.

தேவைப்படும் பொருட்கள் :ஒரு கிலோ பூண்டு, அரை கிலோ இஞ்சி, அரை கிலோ பச்சை மிளகாய். பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாயை தனித்தனியாக அரைத்து  7 லிட்டர் தண்ணீரில் கலந்து வடிகட்டி ஒரு லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி என்ற விகிதத்தில் கலந்து மாலைவேலையில் பயிருக்குத் தெளிக்கலாம். பூண்டில் ‘அலிசின்’ என்ற வேதிப்பொருள் உள்ளது. இது பூச்சிகளை கட்டுப்படுத்தும். பூஞ்சணங்களை வளர விடாது – பயிருக்கு சத்துப்பொருளாகவும் பயன்படும். இஞ்சி, மிளகாய் தாவரப் பூச்சிவிரட்டியாகவும் செயல்படும்”.

click me!