”இந்த மண்ணின் பாரம்பர்ய விளையாட்டுக்களில் சண்டைக்கோழி விளையாட்டும் ஒன்று. செங்கறுப்பு, மயில், கீரி, பேடு, வல்லூறு என இருபது சண்டைக்கோழி இரகங்கள் உள்ளன.
மயில் இரகக் கோழிகளுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. நாமக்கல் பகுதியில் இருந்து, இந்த இரக கோழிகளை வாங்கலாம். பெட்டைக்கோழி அதிகபட்சம் மூன்று கிலோ வரை வரும். சேவல், 7 கிலோ வரை வளரும்.
undefined
சண்டைக்கோழிகளை 6 மாதங்கள் வளர்த்து மூன்று கிலோ எடை வந்தவுடன் ஒரு கோழி ஆயிரம் ரூபாய் என விற்று விடுவர்.
‘கோழி விற்பனைக்கு உள்ளது’ என்று தெரிந்தால், வியாபாரிகள் நேரடியாக வந்து வாங்கிக் கொள்வார்கள்.
சண்டைக்கோழிகளுக்கு கம்பு, சோளம், ஆட்டு ஈரல் போன்றவற்றை தீவனமாகக் கொடுக்க வேண்டும்.
மூச்சுப்பயிற்சிக்காக தினமும் தண்ணீரில் நீந்த விட வேண்டும். இப்படி சண்டைக்கோழிகளைப் பழக்குவது தனிக்கலை. நன்கு பழக்கப்பட்ட கோழி, திறமையைப் பொறுத்து 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 30 ஆயிரம் வரை கூட விலை போகும்.
சண்டைக்கோழிகள், விளையாட்டுக்கு மட்டும் பயன்படும் என்று சிலர் நினைக்கலாம்.
தோட்டத்தில் 5 கோழிகள் இருந்தால் போதும். அவை நிலத்தில் வழை, தென்னை… என எந்தப் பயிராக இருந்தாலும், சிறிய களைகளைக் கூட விட்டு வைக்காமல் மேய்ந்து விடும்.
இவற்றின் கால்கள் மிகவும் கூர்மையாக இருப்பதால், கால்களாலேயே களைகளைக் கிளறி விடும்.
5 ஆட்கள் வைத்து களையெடுக்கும் வேலையை, 5 சண்டைக்கோழிகள் செய்து விடும்.
களைகளை வேர் வரை பறித்து உண்டு விடுவதால், மீண்டும் முளைப்பதில்லை என்பது உண்மை.