உருளைக்கிழங்கில் ஏற்படும் கருகல் நோய் பாதிப்புகளை களைய எதிர்ப்பு மரபணுக்களை உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது உருளைக்கிழங்கிற்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பால் அதன் விளைச்சல் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாதிப்புகள் தக்காளி பயிர்களுக்கும் ஏற்பட்டு வருகிறது.
இங்கிலாந்தில் மட்டும் இந்த நோய் பாதிப்பால் £55 மில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை நிவர்த்தி செய்ய “காளான் கொல்லி”யினை அடிக்கடி பயிர்களுக்கு பயன்படுத்துவது மற்றும் இரசாயன மருந்துகளை தெளித்தல் போன்றவற்றின் மூலம் நோய் வராமல் தடுக்கலாமாம்.
மேலும் ஆர்பிஐ-எஎம்ஆர் – 3 எதிர்ப்பு மரபணுவினை பயன்படுத்தினால் பாதிப்பு பெருமளவு குறையும்.
எதிர்ப்பு மரபணு செறிவூட்டல் வரிசைமுறை மற்றும் ஒற்றை மூலக்கூறு ரியல் டைம் வரிசைமுறை கண்டுபிடித்து இரண்டு வரிசை முறை நுட்பங்களை இணைப்பதன் மூலம் எதிர்ப்பு மரபணுவினை மிக எளிதாக உருவாக்க முடியும். இத்தொழில்நுட்பம் இரண்டு முறைகளில் உள்ளது நீண்ட டி.என்.ஏ மூலக்கூறுகளை எதிர்ப்பு மரபணுக்களாக பயன்படுத்த வேண்டும்.
இந்த டி.என்.ஏ மூலக்கூறுகளை எஸ்எம்ஆர்டி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மரபு குறியீடு மூலம் துல்லியமாக விஞ்ஞானிகள் தீர்மானிக்கின்றனர். இதில் பல வரிசை முறையும் உள்ளது.
இந்த தொழில்நுட்பம் செலவுகளை குறைப்பதற்கும் மற்றும் நேரத்தை சேமிக்கவும் உதவுகிறது.
மேலும் கருகல் நோயினை குணப்படுத்த மற்ற தாவரத்தின் மரபணுவினை பயன்படுத்த உள்ளதாக விஞ்ஞானிகள் கூறினர்.