வரும் பத்து ஆண்டுகளில் உலகில் உணவு உற்பத்தி தேவை இரண்டு மடங்கு அதிகரிக்கும். அதுமட்டுமல்லாது அவர்களுக்கு நல்ல ஊட்டச்சத்தும் கிடைப்பது மிக அரிதாக இருக்கும்.
இதனை பற்றி பொறியாளர்கள் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டதில் “பீன்ஸ்” அதிக ஆற்றலை கொடுக்கும் என்று கூறியுள்ளனர்.
இந்த ஆற்றலை இரசாயனம் இல்லாமல் கொண்டு வர துத்தநாக ஆக்ஸைடின் நானோ துகள்கள் உதவும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
மேலும் மண்ணில் பாஸ்பரஸ் ஆற்றலை அதிகப்படுத்தினால், பீன்ஸ் ஆற்றல் மேலும் அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறினர்.
உணவு பயிர்களின் வளர்ச்சிக்கு மிக அவசியமானது பாஸ்பரஸ். ஆனால் பாஸ்பரஸை மண்ணில் 42% மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால், உலகில் உள்ள விவசாயிகள் 82% பயன்படுத்துகின்றனர். இதனால் நீர் வளங்கள் பாதிக்கப்படுகிறது.
தற்போது விஞ்ஞானிகள் பாஸ்பஸை அதிக அளவு பயன்படுத்தியதாலே கடந்த 80 ஆண்டுகளாக உணவில் உள்ள ஆற்றல் குறைந்து விட்டது.
பாஸ்பரஸை குறைத்து துத்தநாகத்தை அதிக அளவு மண்ணில் உபயோகித்தால் மண் வளம் பெருகும்.
காலநிலை மாறுபாட்டின் காரணமாக தினசரி வெப்பநிலை மாறியதால் மழை அளவு குறைந்து விட்டது. இதனால் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் அழிந்து விடுகிறது.
பீன்ஸ் தாவர வளர்ச்சிக்கு 11% பாஸ்பரஸ் மட்டுமே பயன்படுத்தினால் போதும். அதில் உள்ள என்சைம்கள் தாவரத்திற்கு கிடைத்து விடும்.
பருப்பு மிக அத்தியாவசிய பொருளாக தென்கிழக்கு ஆசியா மற்றும் சீனா, இந்தியாவில் இருந்து வருகிறது. பெரும்பாலும் வளரும் நாடுகளுக்கு பாஸ்பரஸ் அமெரிக்காவில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனை தவிர்க்க துத்தநாகத்தை விவசாயிகள் அதிக அளவு பயன்படுத்தினாலே போதும்.