மீன் அமினோ அமிலத்தை இப்படி தெளித்தால்தான் முழு பலனும் கிடைக்கும்...

 |  First Published Jun 8, 2018, 1:27 PM IST
The amount of amino acids to sprout solely will be ...



மீன் அமினோ அமிலத்தை தெளிக்கும் முறை....

மீன் அமினோ அமிலத்தை 200 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணிரில் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கலாம். 

Latest Videos

பயிர்கள் புத்துணர்ச்சி அடைந்தது போல் 3 நாள்களில் செழித்து காணத் துவங்கும்.ஒரு முறை தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 6 மாத காலம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். 

தேவைப்படும் போது மீன் அமினோ அமிலத்தை எடுத்துக் கொண்டு பிளாஸ்டிக் வாளியை காற்று புகாமல் மூடி வைத்து பாதுகாக்க வேண்டியது அவசியம்.

நாய், பூனை போன்ற வீட்டு விலங்குகளிடமிருந்து இந்த திரவத்தை பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

பயன்கள்: 

மீன் அமினோ அமிலம் என்பது ஒரு முக்கிய வளர்ச்சி ஊக்கியாக செயல்படும் தன்மை கொண்டது.

விவசாயிகள் தழைச்சத்துக்கு யூரியாவை பயன்படுத்துவதற்கு பதிலாக இந்த அமிலத்தை பயன்படுத்தலாம்.

மீன் அமினோ அமிலத்தை பூக்கும் மற்றும் காய்க்கும் தருணத்தில் பயன்படுத்தும் போது நன்றாக பூக்கும் மறறும் காய்க்கும் திறன் அதிகரிக்கும். 

இந்த அமிலம் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பாதிப்புகளையோ, பக்கவிளைவுகளையோ ஏற்படுத்துவது கிடையாது.

எனவே தமிழக விவசாயிகள் குறைந்த செலவில் அதிகளவு உற்பத்தி, உற்பத்தித் திறன் மற்றும் மகசூல் பெற்று தரும் இயற்கை முறையிலான மீன் அமினோ அமிலத்தை தாங்களே தயாரித்து பயன்படுத்தி அதிக லாபம் பெறலாம்.

click me!