பயிர்களில் அதிக சேதத்தை விளைவிக்கும் நத்தையை கட்டுப்படுத்தும் பத்து வழிகள்…

 |  First Published Jul 19, 2017, 12:14 PM IST
Ten Ways to Control the Snail



மழையால் பயிர்களில் நத்தைகள் அதிகம் பெருகி காணப்படும். முக்கியமாக வாழை, முட்டைக்கோஸ், பப்பாளி, அகத்தி, கீரைவகைகள், பயறுவகைகள், நிலக்கடலை, வெண்டை, கத்தரி, மக்காச்சோளம், கொக்கோ, வெள்ளரி, அலங்காரப் பூச்செடிகள் போன்ற பல்வேறு பயிர்களின் இலைகளைத் தின்று சேதம் ஏற்படுத்துகின்றன.

அதிக சேதம் விளைவிக்க கூடிய இவற்றை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

Tap to resize

Latest Videos

1. முடிந்த அளவு கண்களுக்கு புலப்படும் நத்தைகளைக் கைகளால் பொறுக்கி அழிக்க வேண்டும்.

2. அழுகிய முட்டைக்கோஸ் அல்லது பப்பாளி இலைகளை வைத்து நத்தைகளை கவர்ந்து இழுத்து அழிக்கலாம்.

3. நத்தைகள் கூடியிருந்தால் இடத்தில் புகையிலைச்சாறும் ஒரு சத மயில் துத்தமும் கலந்த கலவையை தெளிப்பதால் நத்தைகள் உடனே இறந்து விடும்.

4. மெட்டால்டிஹைடு 5 சத மருந்தினை அரிசித்தவிடுடன் கலந்து நில இடுக்குகளில் இடுவதால் நத்தைகள் ஈர்க்கப்பட்டு நச்சுணவை உண்டு இறந்து விடும்.

5. சாதாரண உணவு உப்பினை தூவுவதால் நத்தைகளின் செயல்பாடு குறைக்கப்படும்.

6. சுண்ணாம்பு தூளை செடிகளை சுற்றி தூவி நத்தைகளை விரட்ட வேண்டும்.

7. இயற்கையாக காணப்படும் எதிரிகளான சில நண்டுகள் மற்றும் மரவட்டைகள் நத்தைகளாக்கி அழிக்கின்றன.

8. மருந்து தெளித்து இறந்து போன நத்தைகளை சேகரித்து உடனே புதைத்து விட வேண்டும்.

9. நத்தைகளின் மறைவிடங்களை கண்டறிந்து உறக்க நிலையில் இருக்கும் நத்தைகளை சேகரித்தும் கட்டுப்படுத்தலாம்.

10. பயிர்ச்செடிகளை நெருக்கமாக நடமால் நல்ல இடைவெளி விட்டு நடுவதால் நத்தைகளின் நடமாட்டத்தை தவிர்க்க முடியும்.

click me!