குறுவை சாகுபடியில் அதிக மகசூல் பெற வேண்டுமா? இந்த தொழில்நுட்பங்கள் கைக்கொடுக்கும்…

 |  First Published Jun 8, 2017, 12:26 PM IST
Techniques for kuruvai cultivation for high yields



 

நெல் சாகுபடிதில் மற்ற பருவங்களைவிட குறுவையில் கூடுதல் மகசூல் கிடைக்கும். நெல்லுக்கு ஏற்ற தட்ப வெப்ப நிலை இந்த பருவத்தில்தான் அதிகமாக பயிருக்கு கிடைக்கிறது.

Latest Videos

undefined

நெல் பயிரை பாதிக்கும் பூச்சிகளான புகையான் இலைச்சுருட்டுப்புழு குருத்துப்பூச்சி மற்றும் குலை நோய் ஆகியவற்றின் தாக்கம் இந்த பருவத்தில் குறைவாக இருப்பதால் மகசூல் அதிகமாக இருக்கும்.

இதனுடன் நவீன தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி மகசூலை மேலும் அதிகரிக்க முடியும்.

பருவம் மற்றும் ரகங்கள்:

மே கடைசி வாரம் குறுவை சாகுபடி பணி தொடங்க ஏற்ற தருணமாகும்.

ஜீன் முதல் வாரத்தில் தொடங்கி ஜீலை முதல் வாரத்துக்குள்லாக நடவு பணியை முடிக்க வேண்டும்.

குறுகியகால ரகங்களான 150 - 110 நாட்கள் வயது கொண்டா ஆடுதுறை-36, ஆடுதுறை-43, ஆடுதுறை மற்றும் அம்பை -18 போன்ற ரகங்கள் குறுவை பருவத்திற்கு ஏற்றது.

விதையளவு மற்றும் விதை நேர்த்தி:

ஒரு ஏக்ககுக்கு குறுகிய கால சான்று பெற்ற நெல் விதை 24 கிலோ தேவைப்படும்.

10 கிராம் சூடோமோனஸ் கலந்த தண்ணீரில் ஒரு கிலோ விதையை ஊறவைத்து விதையால் பரவும் நோய்களை கட்டுப்படுத்தலாம்.

நாற்றங்கால் தயாரிப்பு:

ஒரு ஏக்கரில் நடவு செய்ய 8 செண்ட் அளவிலான நாற்றங்காலில் அடியுரமாக 1 செண்டிற்கு 2 கிலோ வீதம் டிஏபி இட வேண்டும்.

நாற்றுகள் 20 முதல் 25 ம் நாட்களில் நட வேண்டியது அவசியம்.

நடவு மற்றும் உர மேலாண்மை:

பம்பு செட் வசதி கொண்ட பகுதிகளில் முன் கூட்டியே கோடை உழவு செய்து ஏக்கருக்கு 10 கிலோ என்ற விகிதத்தில் பசுந்தாள் உரப் பயிர்களான சணப்பை அல்லது தக்கை பூண்டை சாகுபடி செய்யலாம்.

இவற்றை பூக்கும் பருவத்தில் மடக்கி உழுது வயலிலேயே 10 நாட்கள் வரை மக்கவிட்டு பின்னர் நடவு செய்ய வேண்டும்.

இதனுடன் ஏக்கருக்கு குறைந்த பட்சமாக 5 டன் மக்கிய தொழு உரம் அல்லது மண் புழு உரம் 1 டன் இட வேண்டும். மேடு பள்ளம் இன்றி தயார் செய்யப்பட்ட நடவு வயலில் மார்க்கர் கருவியால் முக்கால் அடி இடைவெளியில் ஒரு குத்துக்கு ஒரு இளம் நாற்று என்ற வீதம் சதுர முறையில் நடவு செய்ய வேண்டும்.

குறுவை பயிருக்கான மண் ஆய்வின் அடிப்படையில் உரம் பரிந்து ரைக்கப்பட்டிருந்தால் பரிந்துரைபடி தழை மற்றும் சாம்பல் சத்தில் கால் பங்கும், மணிச் சத்தில் முழு பங்கும் அடியுரமாக இடவேண்டும்.

மண் ஆய்வு செய்யபபடாத வயலில் வழக்கமான பரிந்துரைப்படி ஏக்கருக்கு டி.ஏ.பி.44 கிலோ, 15 கிலோ யூரியா, 10 கிலோ பொட்டாஷ் கலந்து அடியுரமாக இட வேண்டும்.

டி.ஏ.பி க்கு பதில் 20:20 காம்ப்ளக்ஸ் உரம் பயன் படுத்தும் நிலையில் ஏக்கருக்கு 20:20 காம்ப்ளக்ஸ் 100 கிலோ மற்றும் 10 கிலோ பொட்டாஷ் கலந்து அடியுரம் இடவேண்டும்.

உயிர் உரம் பயன் படுத்துதல்:

நடவுக்கு முன் நாற்றுகளை தலா 4 பாக்கெட் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா மற்றும் 1 கிலோ சூடோமோனஸ் கரைசலில் நாற்றின் வேர்களை நனைத்த பின்னர் நட வேண்டும்.

அதேபோன்று ஒரு ஏக்கருகு தலா 4 பாக்கெட் அசோஸ்பைரில்லம் பாஸ்போ பாக்டீரியாவுடன் 25 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரம் மற்றும் ஒரு கிலோ சூடோமோனோஸ் கலந்து இட வேண்டும்.

இந்த உயிர் உரங்கள் 25 சததழைசத்தை சேமிக்கும் திறன் கொண்டது.

நுண்ணூட்டம் இடுதல்:

தொடர் நெல் சாகுபடி மற்றும் களர் உவர் நிலங்களில் அதிக அளவு துத்தநாக சத்து குறைபாடு ஏற்படுகிறது. நடவு பயிற் கரைந்து விடாமல் அதிக தூர் வெடித்து வளர மகசூல் பெற நடவிற்கு முன்னர் ஏக்கருக்கு 10 கிலோ ஜிங்சல்பேட் நுண்ணூட்ட உரத்தை 25 கிலோ மணலுடன் கலந்து இட வேண்டும்.

சில நேரங்களில் நடவிற்கு பின்னர் பயிரில் தூகட்டும் நிலையில் துத்துநாக குறைபாடு தென்படலா. அதாவது இலை பழுப்பு நிறமாக துருப்பி டித்தது போன்று இருக்கும். இதை தடுக்க 0.5 சதம் ஜிங்சல்பேட் மற்றும் 1 சதம் யூரியா கலந்து இலை வழி நுண்ணூட்டமாக தெளிக்க வேண்டும். (1 லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் ஜிங்சல்பேட் மற்றும் 10 கிராம் யூரியா)

மேலுரம் இடுதல்:

பரிந்துரைத்த அளவுப்படி தழை மற்றும் சாம்பல் சத்துக்களை அடி உரமாக இட்டது போக மீதம்ள்ள உரத்தை 3 பகுதிகளாக பிரித்து பயிரின் மூன்று முக்கிய வளர்ச்சி பருவத்தில் கொடுக்க வேண்டும்.

நடவுக்கு பின்னர் தூர்கட்டும் பருவமான 35-40ம் நாள் கதிர் உருவாகும் பருவமான 45-50 நாள் மற்றும் கதிர் வெளிவரும் பருவமான 70-75 நாட்களில் இட வேண்டும்.

மேலுரம் இடும் பொழுது பொது வான பரிந்துரைப்படி ஒரு ஏக்கருக்கு 33 கிலோ யூரியா மற்றும் 8.5 கிலோ பொட்டாஷ் உரத்தை கலந்து பயிருக்கு அளிக்க வேண்டும்.

யூரியாவில் உள்ள தழை சத்து எலிதில் கரைவதை தடுக்கவும், பூச்சி நோய் கட்டுப்பாட்டுக்காகவும். முதல் நாளே 5 மடங்கு யூரியாவுடன் 1 மடங்கு வேப்பம் புண்ணாக்கு கலந்து வைத்து விட வேண்டும்.

மறுநாள் இதனுடன் பரிந்துரைக்கப்பட்ட அளவிலான பொட்டஷ் உரத்தை கலந்து மேலுரமாகை இட வேண்டும்.

இழை வழி உரம் அளித்தல்:

நெற்பயிறுக்கு கதிர் உருவாகும் தருணத்திலும் மீண்டும் 10 நாட்கள் கழித்தும் இருமுறை யூரியா, பொட்டாஷ் தலா 1 சதமும் டிஏபி 2 சதமும் கலந்த கூட்டுக்கலவை உரம் தயாரித்து கதிர் வெளிவரும் தருணத்தில் தெளிக்க வேண்டும்.

களை நிர்வாகம்:

முறையான பாசனத்தால் கை களையெடுப்பின் வாயிலாகவே களைக்கொல்லி இன்றி களையை கட்டுப்படுத்தலாம். கட்டுக்கடங்காத களை தோன்றும் வாய்ப்பு இருப்பின் ஏக்கருக்கு 1 லிட்டர் பூட்டாக்குளோர் அல்லது அரை லிட்டர் பிரிட்டிலாகுளோர் களைக் கொல்லியை 20 கிலோ மணலில் கலந்து நடவு செய்த 3 நாட்களுக்குள் வயலில் சீராக் தூவ வேண்டும்.

நீர் நிர்வாகம்:

நடவு நட்டதிலிருந்து ஒரு வாரத்துக்கு நடவு பச்சை பிடிக்கும் வரை 2 செ.மீ உயரத்துக்கு நீர் கட்ட வேண்டும். நடவு நன்கு பச்சை பிடித்தபின் 5 செ.மீ உயரத்துக்கு நீர் கட்டி, அது வற்றிய பின்னர் மீண்டும் அதே அளவுக்கு நீர் கட்ட வேண்டும்.

இதே வகையில் பாசனம் காய்ச்சலும், பாய்ச்சலும்மாக் இருக்கவேண்டும். நடவு வயலை பள்ளம் மேடு இன்றி சமமாக அமைப்பதால் பாசன நீர் சிக்கனம் ஏற்படுவதுடன் களையும் கட்டுக்குள் இருக்கும்.

பயிர் பாதுகாப்பு: 

குறுவை பருவத்தில் நிலவும் அதிகபட்ச வெப்பநிலை மற்றும் அதிகப்படியான சூரிய ஒளி பூச்சி நோய்களில் இருந்து பயிரைகாக்கிறது. நெல் பயிரின் மிக்கிய பூச்சிகளான இலைசுருட்டுப்புழு மற்றும் குருத்துப் பூச்சிகளை உயிரியல் முறையில் கட்டுப்படுத்த முறையே டிரைக் கோகிரமா கைளோனிஸ் மற்றும் டிரைக்கோகிரமா ஜப்பானிக்கம் என்ற முட்டை ஒட்டுண்ணியை பயன்படுத்தலாம்.

இதை நடவு நட்ட 30ம் நாளுக்கு பின்னர் ஏக்கருக்கு 2.5 சிசி என்ற அளவில் ஒரு வார இடைவெளியில் 2 லிருந்து 3 முறை வெளியிட்டு கட்டுப்படுத்தலாம். 5 அசதம் வேப்பங் கொட்டை சாறு அல்லது 3 சதம் வேப்பெண்ணெய் தெளிப்பதாலும் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். பொருளாதார சேத நிலையை கடந்து பூச்சிகள் தாக்கும் பொழுது மட்டுமே ரசாயன பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்த வேண்டும்.

இலை சுருட்டுப்புழு மற்றும் குருத்துப் பூச்சிகளை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 400 மிலி புரபோனோபாஸ் அல்லது 500 மிலி பாஸ்போமிடான் மருந்தினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.

நோய்களை பொறுத்தவரை சூடோமோனஸால் விதை நேர்த்தி செய்து நடுதல் மற்றும் இலைவழியாக தெளித்தல் ஆகியவற்றால் குலை நோய், இலையுறை கருகல் மற்றும் இலையுறை அழுகல் நோய்கள் கட்டுப்படுகிறது.

குறுவை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் இந்த தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி நிறைந்த மகசூல் பெறலாம்.

click me!