சூரியகாந்தி பயிரைத் தாக்கும் நோய்கள் பற்றிய பார்வை….

 |  First Published Jan 12, 2017, 2:24 PM IST

சூரியகாந்தி பயிர் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது.

சூரியகாந்தி பயிரை தாக்கும் நோய்களில், அடிச்சாம்பல் நோய் எனப்படும் பிளாஸ்மோபேரா ஹால்ஸ்டிடி, துருநோய் எனப்படும் பக்னீசியா ஹீலியாந்தி, அல்டர்னேரியா கருகல் எனப்படும் மேப்ரேர்போமினா பேசியோலினா, ஸ்கிலிரோசியம் வாடல் எனப்படும் ஸ்கிலிரோசியம் ரால்பசி, ரைசோபஸ் ஸ்பிசிஸ் போன்றவை முக்கியமானது.

Tap to resize

Latest Videos

அடிச்சாம்பல் நோய்:

அடிச்சாம்பல் நோய் எனப்படும் பிளாஸ்மோபோரா ஹால்ஸ்டிடி நோய் அதிகமாக விதையின் மூலம் பரவுகிறது. இந்நோயினால் பாதிக்கப்பட்ட செடிகள் அழுகியும், இலைகளில் பழுப்பு நிறக்கோடும், வேர்கள் அல்லது தண்டுகளில் முடிச்சுகள் காணப்படும். முதல் நிலை அறிகுறியாக மேல் இரண்டு இலைகள் மஞ்சள் நிறமாக மாறியிருக்கும்.

தீவிரமாக நோய் தாக்கப்பட்ட செடிகளில் வளர்ச்சி குன்றியும், இலைகள் முழுவதும் வெளிர் பச்சை நிறத்துடன் காணப்படும். தண்டுகள் ஒடியும் தன்மையுடையதாகவும், இலைகள் கருகிய தோற்றத்துடனும், மஞ்சள் மற்றும் பச்சை நிறம் இலைகளில் மாறி மாறி காணப்படும்.

இலைகளின் அடியில் பூசண வளர்ச்சி காணப்படும். இவற்றைக் கட்டுப்படுத்த விதையை நேர்த்தி செய்ய வேண்டும். பயிர் செய்யப்படும் இடம், நோயினால் பாதிக்கப்பட்ட செடிகளை அழித்தல் ஆகிய சிறிய கட்டுப்பாட்டை கொடுக்கும்.

துருநோய்:

துருநோய் எனப்படும் பக்னீசியா ஹீலியான்தி நோய் சம்பா பருவ காலங்களில் அதிகமாகவும், குறுவை பருவத்தில் குறைவாகவும், மெதுவாகவும் உருவாகவும். இந்நோய் அல்செர்னேரியா கருகல் நோயுடன் சேர்ந்து 40 சதவீதம் குறைந்த மகசூலை தருகிறது. இவற்றை கட்டுப்படுத்த தகுந்த தடுப்பு மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.

அல்டர்னேரியா கருகல்:

அல்டர்னேரியா கருகல் எனப்படும் அல்டர்பேமினா பேசியோலினா நோய் பயிர் செய்யப்படும் எல்லா இடங்களிலும் பரவியுள்ளது. விதை மற்றும் எண்ணெய் மகசூலை பாதிக்கிறது. சூரியகாந்தி தைலப்பகுதியின் விதைகளில் எண்ணிக்கை தரம் குறைகிறது.

இந்நோய் பாதிக்கப்பட்ட இலைகளில் அடர்பழுப்பு அல்லது கருப்பு நிறத்தில் வட்ட வடிவ புள்ளிகள் தோன்றுகின்றன. இப்புள்ளிகளை சுற்றி செல்கள் இறந்து காணப்படும். வட்ட வடிவ வளையம் போன்ற கோடுகளும் மத்திய வெண்மையான பகுதியும் இருக்கும்.

புள்ளிகள் முதலில் அடி இலைகளிலும், பின்னர் மேல் மற்றும் மத்திய இலைகளிலும், பின்னர் இப்புள்ளிகள் இலைக்காம்புகளிலும் தண்டு மற்றும் பூக்களின் பாகங்களிலும் பரவிக் காணப்படும். இந்நோயை கட்டுப்படுத்த தகுந்த தெளிக்க வேண்டும்.

விதைக்கப்படும் பருவகாலத்தை பொறுத்து இந்நோயின் நிலை மாறுபடும். செப்டம்பர் மாத இடையில் விதைத்தால் இந்நோயின் தாக்குதலிலிருந்து விடுபடலாம்.

சார்கோல் அழுகல்:

சார்கோல் அழுகல் எனப்படும் மேப்ரோப்போமினா பேசியோலினா நோயினால் பாதிக்கப்பட்ட செடிகள், காய்ந்தும் தண்டின் அடிப்பகுதியில் கருப்பு நிறக் கோடுகளும் காணப்படுகின்றன. பாதிக்கப்பட்ட செடிகள் பகுதியில் ஸ்கிலிரோசியஸ் காணப்படும்.

சில நேரங்களில் நாற்றழுகல், வேரழுகல் போன்றவை காணப்படும். இந்நோயைக் கட்டுப்படுத்த கோடையில் ஆழமாக உழுதல், பயிர் சுழற்சி முறையை  மேற்கொள்தல் கடைபிடிக்க வேண்டும்.

மண்ணுடன் தொழு உரம் எக்டருக்கு தகுந்த அளவில் கலந்து போட வேண்டும். தகுந்த தடுப்பு மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.

ஸ்கிலிரோசியம் வாடல்:

ஸ்கிலிரோசியம் வாடல் எனப்படும் ஸ்கிலிரோசியம் ரால்பசி நோய் செடியின் அடித்தண்டில் வெண்மையான பூசணப்பகுதியில் காணப்படும். இறுதியில் செடி காய்ந்து இறந்து விட நேரும்.

வெண்மையான பூசணப்பகுதியில் கடுகு போன்ற ஸ்கிலிரோசியம் காணப்படும். இந்நோயை கட்டுப்படுத்த முந்திய பயிரின் கழிவுகளை அழிக்க வேண்டும். தகுந்த தடுப்பு மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.

ரைசோபஸ் தலை அழுகல் நோய்:

ரைசோபஸ் தலை அழுகல் நோய் எனப்படும் ரைசோபஸ் ஸ்பிசிஸ் நோயின் அறிகுறிகளாக சூரியகாந்தியின் தலைப்பகுதியில் பழுப்புநிறப்புள்ளிகள் காணப்படும். இப்புள்ளிகள் பெரியதாக வெண்மையான பூசண வித்துக்களால் சூழப்பட்டிருக்கும்.

அழுகிப்போன தலைப்பாகம் உதிரத் தொடங்கும். பூப்பூப்பதற்கு முன் தலைப்பகுதியில் காயம் ஏற்படும். மிகவும் மென்மையான விதை உருவாகும் நிலை ஏற்படும். பூசணத்தால் பாதிக்கும் நிலையைப் பொறுத்து மகசூல் நிர்ணயிக்கப்படும்

click me!