விவசாயிகளிடமிருந்து தேங்காய் கொள்முதல் செய்து அவற்றை உடைத்து பருப்பைக் காயவைத்துக் கொப்பரையாக்கி வியாபரிகளுக்கு விற்பனை செய்வார்கள்.
களத்தைச் சுற்றிலும் இரும்பாலான கூண்டுகள் சில வைக்கப்பட்டிருக்கும். மரக்கன்றுகள் நட்டால் அதை ஆடு மாடுகள் கடிக்காமல் இருக்கப் பாதுகாப்புக்காக வைக்கப்படும் தடுப்புக் கூண்டுகள்.
சூழலை நினைத்துவிட்டு, ஆஹா! என்ன ஒரு திட்டம்! களத்தைச் சுற்றிலும் மரம் வளர்க்கப் போகிறார்கள் என்று கற்பனை செய்ய வேண்டாம்.
அப்படியெல்லாம் ஒரு புண்ணாக்குத் திட்டமும் இல்லை.
அந்தக் கூண்டுகளுக்குள் கரியால் மூட்டப்பட்ட நெருப்பை ஒரு இரும்புச்சட்டியில் உள்ளே வைத்து விடுவார்கள் அதன் பின்பு அந்த நெருப்பில் போதுமான அளவு கந்தகத்தைப் போட்டு விஷப்புகை உருவாக்குவார்கள்.
அந்தப்புகை வெளிவருமுன்பே மின்னல் வேகத்தில் அந்தக் கூண்டை தேங்காய்க் கொப்பரையால் குவித்து மூடிவிடுவார்கள். அதன்மேல் விஷப்புகை வெளியேரா வண்ணம் தார்ப் பாய்களைக் கொண்டும் மூடிவிடுவார்களாம். இப்படி நிறையக் கூண்டுகள்!
அந்த இரசாயனப் புகை தேங்காய்க் கொப்பரையில் பூஞ்சாணம் என்று சொல்லக்கூடிய நுண்கிருமிகள் தாக்காமல் இருக்கவும் அதனால் கொப்பரை வெண்மையாக நல்ல விலைக்கு விற்கவும் இந்த ஏற்பாடு.
அந்தப் புகையைச் சுவாசிக்காமல் அவர்கள் தப்பித்துக் கொள்ளலாம். அதனால் செத்துத் தொலையும் நுண்கிருமிகளைப்பற்றி யாருக்கும் கவலையில்லாமல் இருக்கலாம். அத்தகைய விஷப்புகையைப் பயன்படுத்துபவர்கள் அதுபற்றிக் கவலைப்படாமல் இருக்கலாம்.
ஆனால் அந்தத் தேங்காய்க் கொப்பரையைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களை உண்டு வாழ்ந்துகொண்டிருக்கிற மக்களின் நிலைமை…