கழுத்து அழுகல் நோயின் அறிகுறிகள்:
பொதுவாக அறிகுறிகள் அறுவடை செய்த பிறகு தான் தோன்றும். நோய் தாக்குதல் வயலில் காணப்படும். அறுவடைக்கு முன்போ அல்லது பின்போ 500 – 750 ஃபாரன்ஹீட்டில் குளிர்ந்த ஈரப்பதமான வெப்பநிலையில் கழுத்து அழுகல் கொள்ளை நோய் உருவாகும்.
அறுவடை செய்யும் போது வறண்ட வெப்பநிலை இருந்தால் சேமித்து வைக்கும் போது ஏற்படும் இழப்பு குறைவாக இருக்கும் .அறிகுறிகள் முதலில் குமிழின் கழுத்துப் பகுதியில் உள்ள திசுக்கள் மென்மையாக மாறி காணப்படும் அல்லது அந்தப் பகுதியில் மிக அரிதான புண்கள் தோன்றும் விளிம்புகள் நோய் தாக்கப்பட்ட திசு மற்றும் திடமான திசுக்களை பிரித்துவிடும்.
நோய் தாக்கப்பட்ட திசுக்கள் சிறுத்தும், மென்மையாகவும் பழுப்பு நிறத்தில் இருந்து சாம்பல் நிறத்தில் தோன்றும். இந்த நோய் படிப்படியாக அடியில் உள்ள குமிழைத் தாக்கும் பிறகு முழு குமிழும் காய நேரிடும்.
இரண்டாவது தாக்குதல் மென்மை அழுகல் நுண்ணுயிரிகள் நீர் அழுகல் நோயை உருவாக்கும். கடினமான, வடிவமில்லாத விதை போன்றும், ஸ்கிளிரோடியா, கழுத்துப் பகுதியிலுள்ள செதில்களுக்கு இடையே தோன்றும் பூசணங்களினால் ஏற்படும் கழுத்தழுகல் நோய் குளிர் காலத்தில் முன்பே நோய் தாக்கப்பட்டு சிதைந்த வெங்காயத்தின் மேல் மண்ணிலேயே காணப்படும் மற்றும் சேமிப்பு கொட்டகையில் உள்ள குப்பைப் பொருள்களிலும் பரவும்.
கட்டுப்பாடு:
நான்கு கி.கி தையாமின்னை வைத்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்
0.25% காப்பர் ஆக்ஸில் க்ளோரைட் அல்லது 0.2% க்ளோரோதலோனில், அல்லது 0.2% ஜினெப் அல்லது 0.2% மேன்கோசெப்பை மூன்று முறை தழை தெளிப்பாக தெளிக்கவும்
உற்பத்தியாளர்கள் பயிர் சுழற்சியை மேற் கொள்ள வேண்டும். சேமிப்பு வைத்திருப்பதில் இருந்து அழிவைக் குறைக்க அறுவடை செய்யப்பட்ட குமிழ்கள் திடமாக இருக்க வேண்டும்.
நோய் தாக்கப்பட்டு இருந்தால் அதனை திடமான குமிழ்களுடன் இணைக்கக்கூடாது
0.25% காப்பர் ஆக்ஸில் க்ளோரைடை மண்ணில் தெளிக்கவும்.