இயற்கை பூச்சி விரட்டி!
பயிர்களைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த, பயன்படுத்தப்படும் தாவரச்சாறே தாவர பூச்சிவிரட்டி என்று அழைக்கப்படுகிறது.
இவற்றை இயற்கை விவசாயத்தில் இரசாயனப் பூச்சி கொல்லிகளுக்கு மாற்றாகப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச் சுழல் மாசுபடாமல் பாதுகாக்கப்படுகின்றது.
இயற்கையில் இரண்டு வகையான பூச்சிகள் உள்ளன. இவற்றில் ஒருவகை தாவரத்தை உண்டு விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தும்.
இரண்டாவது வகை தாவரங்களுக்கு தீங்க விளைவிக்கும் பூச்சிகளை உண்டு தாவரங்களின் வளர்ச்சியைப் பாதுகாப்பவை.
தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த, பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துவதால் நன்மை பயக்கும் பூச்சிகளும் கொல்லப்படுவதில்லை. மாறாக பூச்சிகள் தாவரத்திலிருந்து விரட்டப்படுகின்றன.
எனவே, பூச்சிகளுக்கு வெறுப்புணர்ச்சியை ஊட்டக்கூடிய தாவரங்களை பூச்சி விரட்டியாக பயன்படுத்துவதே இம்முறையின் நோக்கமாகும்.
பூச்சி விரட்டி கரைசல் தயாரிக்க
1.. கசப்பு சுவையுடன் இருக்க வேண்டும். (எ.கா) வேம்பு, சோற்றக்கற்றாழை, குமிட்டிகாய்
2. இலைகளை ஒடித்தால் பால் வரும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.
(எ.கா) எருக்கு, காட்டமணக்கு
3. ஆடு, மாடு உண்ணாத இலை தழைக்ள்- (எ.கா) ஆடாதோடை, நொச்சி, ஆடுதிண்ணா பாலை, சப்பாத்திக்கள்ளி, அரளி
4. துர்நாற்றம் வீசும் இலை தழைகள்- (எ.கா) பீச்சங்கு, சீதா, பீ நாரி, ஊமத்தை போன்ற இலைகளை தேர்வு செய்ய வேண்டும்.
தேவையான பொருட்கள்: (ஒரு ஏக்கருக்கு தேவையான அளவுகள்)
1. காட்டாமணக்கு – 1/2 கிலோ
2. குமிட்டிகாய் – 1/2 கிலோ
3. ஊமத்தை – 1/2 கிலோ
4. பீச்சங்கு – 1/2 கிலோ
5. சோற்றுக்கற்றாழை – 1/2 கிலோ
6. எருக்கு – 1/2 கிலோ
7. அரளி – 1/2 கிலோ
8. நொச்சி – 1/2 கிலோ
9. சப்பாத்திக் கள்ளி – 1/2 கிலோ
10. ஆடா தோடா – 1/2 கிலோ
11. நெய்வேலி காட்டாமணக்கு- 1/2 கிலோ
12. வேம்பு – 1/2 கிலோ
13. மாட்டு கோமியம் – 1/2 கிலோ
14. மாட்டு சாணம் – 1/2 கிலோ
15. மஞ்சள் தூள் – 1/2 கிலோ
மேலே குறிப்பிட்டடுள்ளவைகளில் குறைந்தது ஐந்து வகை தாவரத்தின் இலை தழைகளை எடுத்து சிறு துண்டுகாளக நறுக்கி, உரலில் இட்டு இடித்து மசித்து கொள்ளவும். மசித்த இலை தழைகளை 15 லிட்டர் மாட்டு கோமியத்தில் ஊற வைத்து, பின்னர் மஞ்சள் தூள் 250 கிராம், சாணம் 1 கிலோ, புகையிலை கரைசல் 1 லிட்டர் கலந்து 15 நாட்கள் நொதிக்க விட வேண்டும்.
அதற்கு பின் கரைசலை வடிகட்டி தெளிவான கரைசலை பயிர்களுக்கு தெளிக்கப்பயன்படுத்தலாம். பத்து லிட்டர் நீருக்க 500 மி.லிட்டர் பூச்சி விரட்டியை கலந்து (5 விழுக்காடு) தெளிக்க பயன்படுத்தலாம்.