மஞ்சள் மெருகேற்றுதல்:
1.. உலர்ந்த கிழங்குகளின் தரத்தை மேம்படுத்த கிழங்குகளை தரையில் கைகளால் தேய்க்கலாம்.
2.. அல்லது காலில் சாக்குத் துணியைக் கட்டிக் கொண்டு காலால் தேய்த்து சுத்தப்படுத்தலாம்.
3.. தற்போது கை மூலம் அல்லது மின்சாரம் மூலம் இயக்க வல்ல இயந்திரங்களை கொண்டும் சுத்தப்படுத்தப்படுகிறது. இவ்வாறு செய்வதால் கிழங்குகளில் மேலுள்ள வேர்த்துண்டுகள் நீக்கப்படுகின்றன.
மஞ்சள் நிறம் ஏற்றுதல்:
மஞ்சள் கிழங்குகளின் தரத்தையும் தோற்றத்தையும் மேம்படுத்த நிறம் ஏற்றுதல் அவசியம். இது உலர் நிறமேற்றுதல் என இரண்டு முறைகளில் செய்யப்படுகின்றன.
மஞ்சள் நல்ல நிறத்தினை பெற 100 கிலோ கிழங்குக்கு கீழ்க்கண்ட பொருட்களை கலந்து ஒரு கலவை தயார் செய்ய வேண்டும்.
படிகாரம் - 40 கிராம்
மஞ்சள் தூள் – 2கிலோ
விளக்கெண்ணெய் – 140கிராம்
சோடியம் பை சல்பேட் – 30கிராம்
அடர் ஹைடிரோ குளோரிக் அமிலம் -30 மில்லி
வேகவைத்த மெருகு ஏற்றிய கிழங்குகளை கூடையில் எடுத்துக் கொண்டு அதனால் மேல் மேற்சொன்ன கலவையை ஊற்றிய நன்கு கலக்க வேண்டும்.
இதனால் கிழங்குகள் ஒருமித்த நிறத்தினை பெறும்.
பின்னர் கிழங்குகளை வெயிலில் உலர்த்தி சேமிக்க வேண்டும்.