ஊட்டமேற்றிய கரும்புத் தோகை கழிவு உரம் தயார் செய்தல்
தயாரிக்கும் முறை:
undefined
1.. நிழல் தரும் வசதியான இடத்தில் 15 மீ நீளம், 3 மீ அகலம், 1 மீ ஆழம் உள்ள குழியை ஏற்படுத்த வேண்டும்.
2.. இந்த குழியில் சுமார் 500 கிலோ கரும்புத் தோகையைப் பரப்ப வேண்டும்.
3.. இதன் மீது ஆலைக் கழிவினை 5 செ.மீ அளவிற்கு பரப்ப வேண்டும்.
4.. இதன் மீது காளான் வித்து, யூரியா, மாட்டுச்சாணம் இவைகளை நீரில் கரைத்து இந்தக் கரைசலை இதன் மீது ஒரே சீராகத் தெளிக்க வேண்டும்.
5.. இவ்வாறு மாற்றி மாற்றி தோகை, பூஞ்சாணம், சக்கரை ஆலைக்கழிவு ஆகியவற்றை உபயோகித்து 10 முதல் 15 அடுக்குகள் வரை தோகையை குழியில் பரப்பலாம்.
6.. ஒவ்வொரு அடுக்கும் நன்கு நன்கு நனையும்படி யூரியா, காளான்வித்து, மாட்டுச்சாணம் கலந்த கலவையைத் தெளிக்க வேண்டும்.
7.. கடைசி அடுக்கின் மீது 15 செ.மீ கனத்திற்கு மண் கொண்டு மொழுகி குவியல் முழுவதும் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும்.
8.. வாரத்திற்கு ஒரு முறை குவியல் நன்கு நனையும்படி இரண்டு அல்லது மூன்று மாதங்கள் வரை தண்ணீர் தெளித்து வர வேண்டும்.
9.. குவியல் ஈரமாக இருந்தால் நுண்ணுயிர்கள் பெருகி தோகை மக்குவது துரிதமாகும்.
10.. மூன்று மாதங்கள் முடிந்து தோகை குவியலைப் பிரித்து நன்றாக கலந்து மீண்டும் குவியலாக்க வேண்டும்.
11.. நான்காவது மாதத்தில் தோகை நன்கு மக்கி ஊட்டமேற்றிய தொழு உரமாக மாறும்.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட கம்போஸ்ட் எருவில் 0.80 சதம் தழைச்சத்தும், 0.2 சதம் மணிச்சத்தும், 0.70 சதம் சாம்பல் சத்தும் உள்ளது.
இது ஒரு சிறந்த இயற்கை உரமாகும்.