விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்ய எளிய வழிகள்…

 |  First Published Nov 24, 2016, 2:32 PM IST



பொதுவாக அரசாங்கம் மக்களுக்கும் வழங்கும் சலுகைகைகள்,நல திட்டங்கள் போன்றவைகள் மக்களுக்கு சரியாக சென்று சேர்வதில்லை என்ற குற்றச்சாட்டு எப்போதும் உண்டு,இதற்கு மக்களின் அறியாமையும்,அதிகாரிகளின் அலட்சிய போக்கும் தான் முக்கிய காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.

அதனால் தான்  நம் ஆட்கள் முக்கியமான விசயங்களில் கோட்டை விட்டு விட்டு,கலர் டிவி வாங்கவும்,வேட்டி சேலை வாங்கவும் முண்டியடித்து முதலிடம் பிடிக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்.

Latest Videos

undefined

அப்படி மக்களின் அறியாமையாலும், அரசு அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த தவறியதாலும்  தான் மத்திய அரசால் 1986-ம் தொடங்கப்பட்ட “விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவி பொருட்கள் ஏற்றுமதி அமைப்பு” (APEDA The  Agricultural  and  processed  food products  export  development  Authority ”  என்ற ஒன்றே இருப்பது நமது மக்கள் பலருக்கு தெரியாமல் போய்விட்டது.

உற்று கவனித்து இருந்தால், கருப்பு வெள்ளை விளம்பரமாக தினசரி செய்திதாள்களின் ஏதவாது ஒரு மூலையில் இதை பற்றிய செய்தி இருக்கும்.

தங்கள் பொருள்களை ஏற்றுமதி செய்ய விரும்புவோர் தங்கள் வைத்துள்ள பொருட்களை பற்றிய தகவல்களை இங்கு பதிவு செய்து வைத்துகொள்ள வேண்டும். பதிவு செய்யப்பட்ட பொருள்களுக்கான தேவையோடு ஏதவாது வெளிநாட்டு நிறுவனங்கள் இவர்களை தொடர்பு கொண்டால் ,இவர்கள் நம்மை தொடர்புகொண்டு வைத்துள்ள பொருள், அளவு ,தரம் போன்றவற்றை பரிசோதித்து ,பிறகு பொருள்களை ஏற்றுமதி செய்யவும் உதவி செய்வார்கள்.

ஏற்றுமதிக்கு புதிதாக உள்ள நபர்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும்படியாக அவர்களுக்கு மான்ய தொகைகளும் வழங்கப்படுகிறது. காய்கறி பூக்கள், பழங்கள், பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகள், அரிசி, கோதுமை, நிலக்கடலை, வெல்லம், பால் பொருட்கள், தேன், உலர் பழங்கள் போன்றவைகளின் தேவைகள் எந்தெந்த நாடுகளில் உள்ளது போன்ற தகவல்களை இந்த அலுவலகத்தை அணுகி தகவல் பெறலாம்.

click me!