செம்மறியாடு (அ) வெள்ளாடுகள் வளர்ப்பு முறைகள்
1.மேய்ச்சல் முறை
** செம்மறியாடு / வெள்ளாடுகளை திறந்தவெளி மேய்ச்சல் நிலங்களில் மேயவிட்டு வளர்க்கும் முறையே மேய்ச்சல் முறையாகும்.
** இம்முறையில் தீவனச் செலவு குறைவு
** இம்முறையில் எல்லா வகைப்புற்களையும் நல்ல முறையில் உபயோகிப்பது அரிது ஆகும். எனவே நாம் சுழற்சி முறை மேய்ச்சலைப் பின்பற்றலாம். .
2.. மண்தரையில் வளர்த்தல்
** இம்முறையில், ஒவ்வொரு வருடமும் 1-2"" மண்தரையின் மேல் தளத்தை எடுத்துவிடவேண்டும்.
** மாதம் ஒருமுறை சுண்ணாம்புத்தூள் தெளிப்பதன் மூலம் ஆடுகளின் கொட்டகையில் நோய்த்தாக்கத்தினை குறைத்திடலாம்.
** கொட்டகையை நல்ல மேட்டுப்பாங்கான, தண்ணீர் தேங்காத இடங்களில் அமைத்திடல் வேண்டும்.
3.. ஆழ்கூள முறை வளர்ப்பு
** இம்முறையில், ஆழ்கூளப்பொருட்களான வேர்க்கடலைத் தோல், கரும்புத்தோகை முதலியவற்றை கொட்டகையின் தரையில் மேல் 1/2 அடி ஆழத்திற்கு இட்டு, அதன்மேல் ஆடுகளை விட்டு வளர்க்கலாம்.
** ஆடுகளின் சாணம் மற்றும் சிறுநீர் ஆழ்கூளப்பொருட்களுடன் கலந்து நல்ல உரமாகப் பயன்படும்
** ஆழ்கூளப்பொருட்களை 6 மாதத்திற்கொருமுறை அள்ளி எடுத்துவிடவேண்டும்.
** பலத்த மழைக்காலத்தில், ஆழ்கூளப்பொருட்கள் அதிக ஈரத்தன்மையுடன் இருப்பின் அமோனியா வாயு உற்பத்தி ஆகும். ஆகவே அதிகம் ஈரம்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
4.. பரண்மேல் கொட்டகை
** அதிக முதலீடு தேவை
** இம்முறையில் தரையிலிருந்து 3 மீ உயரத்தில் மரப்பலகையிலான தரைகொண்ட கொட்டகை அமைத்து ஆடுகளை வளர்க்கலாம்.
** இம்முறையில் குறைந்த வேலையாட்களும், பசுந்தீவனம் உற்பத்தி செய்ய அதிக நீர்பாசன நிலமும் தேவைப்படும்.
** உயர்த்தப்பட்ட கொட்டகை சுத்தமாக இருக்கும். மேலும் ஆடுகளின் சாணம் மற்றும் சிறுநீர் தரையில் விழுந்துவிடும். இதனை ஆறு மாதத்திற்கொரு முறை எடுத்துவிட்டு சுத்தமாக வைத்துக் கொள்ளவேணடும்