கொட்டகைகளில் ஆடுகளுக்கு குளியல் தொட்டி மற்றும் நடைபாதை அமைக்கும் முறை...

Asianet News Tamil  
Published : Feb 13, 2018, 01:52 PM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
கொட்டகைகளில் ஆடுகளுக்கு குளியல் தொட்டி மற்றும் நடைபாதை அமைக்கும் முறை...

சுருக்கம்

Method of setting up a bathtub and pavement for sheds in sheds ...

1.. குளியல் தொட்டி

** ஆடுகளை நுண்ணுயிரிகள் தாக்கத்திலிருந்து பாதுகாக்க எஃகு இரும்புத் தகடுகளாலான குளியல் தொட்டி அல்லது செங்கல் / சிமெண்டிலான குளியல் தொட்டிகளை அவரவர் பொருளாதாரம் மற்றும் இருக்கும் இடத்திற்கு ஏற்ப அமைத்துக் கொள்ளலாம்.

** எஃகு இரும்பிலான தகடுகளால் குளியல் தொட்டி அமைக்கும்போது இதை மண்ணில் நன்றாக பதியவைக்க வேண்டும். தொட்டியைச் சுற்றி நன்றாக மண் அணைத்தல் வேண்டும். அப்போதுதான் தண்ணீர் நிரப்பும்போது தொட்டியின் வடிவம் மாறாமல் இருக்கும்.

** தொட்டியை பதிக்கும் இடத்தில் மண் தளர்வாகக் காணப்பட்டால், சிமெண்ட் கான்கிரீட் கொண்டு அடித்தளத்தை உறுதி செய்து கொள்ளலாம்.

** இந்த குளியல் தொட்டி கொட்டகையின் ஒரு பக்கமாக இருக்கவேண்டும்.

2.. நடைபாதை 

** கால்நனைப்பு மருந்துக் கலவையை எஃகு இரும்புத் தகடு அல்லது சிமெண்ட் பூச்சினாலான பள்ளத்தில் கொட்டகையின் நுழைவுவாயிலில் அமைத்தல் வேண்டும். இதனால் ஆடுகளுக்கு ஏற்படும் குளம்பு வீக்க நோயிலிருந்து பாதுகாப்பு அளிக்கலாம்.

** இந்த கால்நனைப்புப் பகுதி நன்றாக மண்ணில் பதிந்து இருத்தல் வேண்டும்.

PREV
click me!

Recommended Stories

Coconut Shell Planters: தேங்காய் ஓடு இருந்தா போதும்.! செலவில்லாம பால்கனிய மினி கார்டனா மாத்துங்க!
Training: கோடிகளை ஈட்டலாம் ஈசியா.! பழங்களை இனி வீணாக்க வேண்டாம்! மதிப்பு கூட்டி லாபம் ஈட்டும் கலை இதோ.!