பெரிய வெங்காய விதை உற்பத்தியில் நாற்றங்காலை தேர்வு செய்வது மற்றும் பராமரிப்பு முறைகள்…

 |  First Published Jun 17, 2017, 11:12 AM IST
Selection of nursery in major onion seeds and maintenance methods ...



நாற்றங்கால் அமைப்பு:

வீரியமுள்ள நாற்றுகளைப் பெற நன்கு பயன்படுத்திய ஒரு சென்ட் நிலத்திற்கு 200 கிலோ வரை மக்கிய தொழுஉரம் அல்லது கம்போஸ்ட் போட்டு மேட்டுப்பாத்தியில் நாற்று விட வேண்டும்.

Tap to resize

Latest Videos

விதைப்பு:

ஒரு எக்டேருக்கு தேவையான 2.5-3கிலோ விதையை விதைக்கு 3 சென்ட் நாற்றங்காலில் விதைப்பு போதுமானது.

மேட்டுப்பாத்தியில் 10cm இடைவெளியில் கோடுகள் போட்டு விதைகளை பரவலாக விதைக்க வேண்டும்.

பின்கோடுகளில் போட்ட விதைகளை மணல்(அல்லது) நாற்றங்கால் மண் கொண்டு மூடிவிட வேண்டும்.

அதன்பிறகு மேட்டுப்பாத்திகள் நன்கு மூழ்கும் அளவிற்கு நீர் பாய்ச்ச வேண்டும். நாற்றுகள் முளைத்த பிறகு வாரம் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.

நாற்றங்காலுக்கு உரமிடுதல்:

எவ்வாறு வளரும் குழந்தைகளுக்கு ஊட்டம் அவசியமோ அதேபோல் நாற்றங்காலுக்கும் உரம் அவசியம். இதற்கு ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு இரண்டு கிலோ டி.ஏ.பி உரம் இடுவதால் நாற்றுகள் நன்கு ஊட்டத்துடன் வளர்கின்றன.

மேலும், நாற்றுக்களை பிடுங்கும் போதும் வேர் அறுபடாமல் சுலபமாக வரும். டி.ஏ.பி உரம் இல்லாவிட்டால், 6கிலோ யூரியாவும் 12kg சூப்பர் பாஸ்பேட்டும் சேர்த்து இடலாம்.

வேர் அறுபடாத நாற்றுக்களை வயலில் நடும்போது எளிதில் அவை நிலத்தில் பிடிப்பு கொள்கின்றன. இதை பச்சை திரும்பி விட்டது எனக் கூறுவர்.

நாற்றின் வயது:

விதைப்பயிர் செழித்து வளர்வதில் நாற்றின் வயது முக்கிய பங்கு வகுக்கிறது. வயது குறைந்த நாற்றுகளையோ அல்லது வயது அதிகமான நாற்றையோ நடுவதால் மகசூல் குறைகின்றது.

வெங்காய நாற்றுகளை, நற்றுவிட்ட 35-40 நாட்களில் எடுத்து நட வேண்டும்.

click me!