பயறு வகைப் பயிர்களில் விதை தேர்வு மற்றும் விதை நேர்த்தி செய்யும் முறை…

 |  First Published Jun 22, 2017, 12:10 PM IST
Seed management in seed crops



 

விதை தேர்வு

Tap to resize

Latest Videos

துவரை விதைகளில் காணப்படும் சுருங்கிய விதைகள், முதிர்ச்சி அடையாத விதைகள், பூச்சி நோய் தாக்கிய விதைகள் ஆகியவற்றை நீக்கி நன்கு முளைப்புத்திறன் உள்ள வீரியமுள்ள சான்று பெற்ற விதைகளை பயன்படுத்த வேண்டும்.

விதை உற்பத்தியின்போது போதுமான தண்ணீர் கிடைக்காமை, அதிக வெப்பம் போன்ற காரணங்களால் கடின விதைகள் உருவாகும் வாய்ப்புள்ளது. இவ்விதைகள் கல்போன்று கடினமாக இருக்கும்.

பொதுவாக சேமிப்பின் போது கடினத்தன்மை நீங்கிவிடும் எனினும் கடின விதை காணப்பட்டால் அவற்றை நீக்கிவிட வேண்டும்.

விதைகளை ஒருமணி நேரம் நீரில் ஊறப்போட வேண்டும். சிலவிதைகள் நீரை உறிஞ்சாது அப்படியே காணப்படும். அவ்வாறு நீர் உறிஞ்சாத விதைகள் கடின விதைகளாகும். அவற்றை நீக்கிவிட்டு மற்ற விதைகளை பயன்படுத்த வேண்டும்.

விதை நேர்த்தி:

விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன் ஒரு கிலோ விதைக்கு இரண்டு கிராம் கார்பன்டாசிம் இரசாயன பூஞ்சான கொல்லி மருந்து கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

ஒரு கிலோ விதைக்கு நான்கு கிராம் டிரைகோடெர்மா விரிடி(அ) பத்துகிராம் சூடோமோனஸ் புளுரோசன்ஸ் எதிர் உயிர் பூஞ்சான மருந்து கொண்டு விதைப்பதற்கு முன் விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை நிழலில் உலர்த்தி பின்பு விதைப்புக்கு பயன்படுத்த வேண்டும்.

ரைசோபியம் விதை நேர்த்தி:

எதிர் பூஞ்சான கொல்லி கொண்டு விதைநேர்த்தி செய்யப்பட்ட விதைகளை ஒரு ஏக்கருக்கு தேவையான விதையுடன் ஒரு பொட்டலம் (200 கிராம்) ரைசோபியம் நுண்ணுயிர் கலவையைச் சேர்த்து சிறிது தண்ணீர் மற்றும் ஆறிய அரிசிக்கஞ்சி ஆகியவற்றை சேர்த்துக் கலந்து 15 நிமிட நிழலில் உலரவைத்து விதைப்பு செய்யலாம்.

 

click me!