இப்படி விதை, நாற்று நேர்த்தி செய்தால் அதிக விளைச்சல் கிடைக்கும்…

 |  First Published Jun 21, 2017, 2:53 PM IST
Seed and nitrogen are treated with high yield



 

விதை, நாற்று நடுவதற்கு முன், ஒரு கிலோ சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் பூஞ்சாண கொல்லியை கலந்து, நாற்று நேர்த்தி செய்வதால், விதை மூலம் பரவக்கூடிய நோய்களான குலை நோய், இலைக் கருகல் ஆகியவற்றை தடுக்கலாம்.

Tap to resize

Latest Videos

ஒரு ஏக்கருக்கு தேவையான விதையுடன், 400 கிராம் அசோஸ்பைரில்லம் பாஸ்போ பாக்டீரியா (400 கிராம்) உயிர் உரத்தை விதையுடன் நன்கு கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

அசோஸ்பைரில்லம் காற்றில் இருக்கும் தழைச்சத்தை உறிஞ்சி பயிருக்கு அளிக்கும். அதே சமயம், பாஸ்போ பாக்டீரியா மண்ணில் கிடைக்காத மணிச்சத்தை கரைத்து பயிருக்கு வழங்குகிறது. இதனால் உரச்செலவு குறைவதுடன் அதிக விளைச்சலும் கிடைக்கும்.

click me!