பூச்சிகள் அதன் சுற்றுச் சூழலில் ஏற்படும் வெளிச்சம் மற்றும் வாசனை துாண்டுதலுக்கு ஏற்ப செயல்படுகின்றன.
கவர்ச்சிப் பொறிகள் மூலம் பூச்சிகளை கட்டுப்படுத்தி அழிக்கலாம்.
இயற்கை முறையிலான கவர்ச்சி பொறி என்பது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் சாகுபடிக்கு பயன்படுத்தி, பூச்சிகளை கட்டுப்படுத்தும் கருவியாகும்.
இதனை காய்கறி, பயிர், தோட்டப் பயிர்கள், எண்ணெய் வித்து பயிர்கள், மலைத்தோட்டப் பயிர்கள் என அனைத்திற்கும் பயன்படுத்தலாம்.
விளக்குப்பொறி நன்மைகள் பொதுவாக தாய் பூச்சிகள் இரவில் விளக்கின் வெளிச்சத்துக்கு கவரக் கூடியவை.
இந்த தத்துவத்தின் அடிப்படையில் விளக்குப்பொறிகள், பூச்சிகளை கவரக் கூடிய சாதனமாக உள்ளன.
பொறியை ஸ்டாண்டில் பொருத்தி பயிரின் உயரத்திற்கு வைக்க வேண்டும்.
விளக்கிற்கு அடியில் அகலமான பாத்திரத்தில் மண்ணெண்ணெய் கலந்த நீரை வைக்க வேண்டும்.
விளக்கு வெளிச்சத்துக்கு கவரப்படும் பூச்சிகள் நீரில் விழுந்து இறந்து விடும்.
ஏக்கருக்கு ஐந்து பொறிகள் வைத்தால் போதும்.
விளக்குப்பொறி எனும் கவர்ச்சி பொறிகள், புற ஊதா ஒளி தொழில்நுட்பம் மூலம் தாய் அந்து பூச்சிகளை கவரக்கூடியது.
கருவிகளை எப்போதும் வேண்டுமானாலும் இயக்கலாம். இது அதிக வெளிச்சம் உடைய எல்.இ.டி. தொழில்நுட்பம் கொண்டது.
தேவையான இடங்களுக்கு மாற்றுவது சுலபம்.
கருவியை மாலை பொழுதில் பயன்படுத்த வேண்டும். இக்கருவி தொடர்ந்து மூன்று முதல் மூன்றரை மணி நேரம் பயன்பாட்டில் இருக்கும். பின் தானாகவே நின்று விடும்.
தினமும் மூன்று முதல் நான்கு மணி நேரம் சார்ஜ் செய்வதால், 16 மணி நேர பேட்டரி சேமிப்பு திறன் கிடைக்கும்.