கடும் வறட்சியிலும் வாழை தோட்டத்தில் ஊடு பயிராக கடலை சாகுபடி செய்தால் இலாபம் பெறலாம்.
தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு பருவ மழை என்பது போதுமான அளவு இல்லை. இதனால் கண்மாய்கள் வறண்டுள்ளன. கால்வாயிலும் தண்ணீர் வரவில்லை.
undefined
கிணற்று பாசனம் மூலம் சாகுபடி செய்பவர்களும் வெயில் மற்றும் வறட்சியால் பயிர்கள் பாதிக்கப்படும் என கருதி விவசாயத்தை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சிலர் மட்டுமே இருக்கும் தண்ணீரை வைத்து குறைந்த அளவில் சாகுபடி செய்தனர்.
வாழை சாகுபடி செய்வோர் வாழைக்கு பாய்ச்சும் தண்ணீரை வீணாக்காமல் அதில் ஊடுபயிராக நிலக்கடலையும் சாகுபடி செய்து இலாபம் பார்க்கலாம்.
வாழை கட்டை ஒன்று ரூ.10, பதியம் செய்வது களை எடுப்பது என ஏக்கருக்கு ரூ. ஒரு லட்சம் வரை செலவாகும்.
இலை முதல் தண்டு வரை அனைத்திற்கும் நல்ல விலை உள்ளது. இதனால் நீண்ட நாள் வருவாயாக ஏக்கருக்கு ரூ. 2.50 லட்சம் இலாபம் கிடைக்கும்.
வாழைக்கு வாரம் ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பாய்ச்சும் தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்த யோசித்தபோது அதில் ஊடுபயிராக கடலை சாகுபடி செய்யலாம்..
இதற்கு ஏக்கருக்கு 50 கிலோ கடலை விதை பயன்படுத்தினால், தனியாக செலவு செய்யத் தேவையில்லை. தண்ணீர் செலவும் குறைவு. இப்போது இரட்டை மகசூல் பெறலாம்.