தென்னம்பாலும், தேங்காய்ப்பாலும் தாய்ப்பாலுக்கு நிகரான சத்தான பானங்கள். இதை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு ஊட்டச்சத்துகள் தடையின்றி கிடைக்கும்.
தென்னம்பாளையில் இருந்து வருவது தான் தென்னம்பால். மண் கலயத்திற்கு பதிலாக இரண்டடுக்கு பாத்திரத்தை பாளையின் அருகில் வைத்து காற்றுப்புகாத பாலிதீன் பையில் தென்னம்பாலை பிடிக்கலாம்.
undefined
பாத்திரத்தின் உட்புறத்தில் பாதியளவிற்கு மற்றொரு பாலிதீன் பையில் ஐஸ்கட்டிகள் நிரப்ப வேண்டும். காலையில் பாத்திரம் வைத்தால் மாலை வரை ஐஸ் பைக்குள் நொதிக்காமல் தென்னம்பால் கிடைக்கும்.
இதை வெளியே எடுத்து 5 டிகிரிக்கு கீழ் இருக்குமாறு பாதுகாத்தால் ஆறுமாதங்கள் வரை கெடாது. சுவையான பானமாக உடனடியாக பருகலாம்.
இதில் ஒரு சதவீதம் கூட ஆல்கஹால் இல்லையென்றாலும் கள் இறக்கும் முறையில் தான் இறக்க வேண்டும் என்பதால் அரசு அனுமதி கிடைக்கவில்லை.
நீரா எனப்படும் தென்னம்பால் நொதிப்பதை தடுக்கக்கூடிய கரைசலை, தென்னை வளர்ச்சி வாரியத்தின் தொழில்நுட்ப நிலையம் தயாரித்துள்ளது.
இதை பயன்படுத்தி நீரா நொதிக்காமல் அறை வெப்பநிலையில் மூன்று வாரங்கள் வரை இயற்கை மணத்துடன் வைத்திருக்கலாம்.
கேரளாவில் தென்னை விவசாயிகள் ஒன்றிணைந்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை அமைத்து நீராவை தயாரிக்கின்றனர்.
பாலக்காட்டில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் நிறுவனம் தயாராகி வருகிறது. தென்னை வளர்ச்சி வாரியமும் நீராவை ஊக்கப்படுத்துகிறது.
இதை தமிழகத்தில் அனுமதித்தால் விவசாயிகளுக்கும் லாபம் கிடைக்கும்.
தென்னம்பால் மட்டுமல்ல தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெய் மூன்றுமே மிகச்சிறந்த உணவு.