தக்காளி சாகுபடி செய்ய உகந்த தொழில்நுட்பங்கள் பற்றி தெரிஞ்சுக்க இதை வாசிங்க…

 |  First Published Apr 24, 2017, 12:17 PM IST
Read on to find the best techniques for tomato cultivation



ஏற்ற மண்:

வருடம் மூழுவதும் பயிர் செய்யக் கூடிய தக்காளிக்கு நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண் அவசியம்.

Latest Videos

undefined

ரகங்கள்

கோ - 1, 2, 3, பி.கே.எம்.1, பூசா ரூபி, பையூர் ஆகிய இரகங்கள் சாகுபடி செய்ய ஏற்றது. 

பருவம்

பிப்ரவரி, மார்ச், ஜூன், ஜூலை, நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் விதைக்கலாம்.

விதை நேர்த்தி

ஒரு எக்டேருக்கு 350 - 400 கிராம் விதைகள் போதுமானது. ஒரு எக்டேருக்கு தேவையான விதைகளை 40 அசோஸ்பைரில்லம் கொண்டு விதைநேர்த்தி செய்யலாம். இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை ஒரு மீட்டர் அகலமுள்ள மேட்டுப்பாத்திகளில் 10 செ.மீ. வரிசை இடைவெளியில் விதைத்து மணல் கொண்டு மூடிவிடவேண்டும்.

நடவு

நிலத்தை நன்கு உழுது பயன்படுத்திவிட்டு 60 செ.மீ, இடைவெளியில் பார்கள் அமைத்து 25 நாள் வயதுடைய நாற்றுகளை பயிரின் ஒரு பக்கத்தில் நடவேண்டும். நடுவதற்கு முன்னர் இரண்டு கிலோ அசோஸ் பைரில்லம், நுண்ணுயிர் கலவையை 20 கிலோ தொழு உரத்துடன் கலந்துவிட வேண்டும்.

நட்டவுடன் முதல் தண்ணீரும், பிறகு 3 வது நாள் உயிர் தண்ணீரும், பிறகு வாரத்திற்கு ஒரு முறையும் நீர் பாசனம் செய்யவேண்டும். அதற்கு பின்னர் தேவைப்படும் போது நீர் பாய்ச்சினால் போதுமானது.

உர நிர்வாகம்

ஒரு எக்டேருக்கு தொழு உரம் 25 டன், தழைச்சத்து 75 கிலோ, மணிச்சத்து 100 கிலோ, சாம்பசல்சத்து 50 கிலோ, போராக்ஸ் 10 கிலோ, துத்தநாக சல்பேட், 50 கிலோ, ஆகியவற்றை அடியுரமாக இடவேண்டும். நட்ட 30, வது நாள் தழைச்சத்து 75 இட்டு மண் அணைக்க வேண்டும்.

நாற்று நட்ட 15 நாள் டிரைகான்டினால் 1 மிலி/1 லிட்டர் என்ற அளவில் பூக்கும் தருணத்தி பூக்கும் தருணத்தில் தெளிக்க வேண்டும்.  இவ்வாறு தெளிப்பதால் மகசூலை அதிகரிக்க செய்யலாம்.

பின்செய் நேர்த்தி

நாற்று நடுவதற்கு முன்னர் ஒரு புளோகுளோரலின், மருந்தை 500 லிட்டர் நீரில் நன்றாக கலந்து தெளிக்கவேண்டும். பின்னர் நீர் பாய்ச்சி நாற்றுகளை நடவேண்டும்.

நாற்று நட்ட 30நாள் ஒரு கைக்களை எடுக்கவேண்டும். காய்புழு மற்றும் புரோட்டினியா புழுவை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறியை எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் அமைக்க வேண்டும்.

புழுக்கள் தாக்கப்பட்ட பழங்களையும், வளர்ந்த புழுக்களையும் உடனே அழித்துவிடவேண்டும். ஒரு எக்டேருக்கு ஒரு லிட்டர் தண்ணீரில், 2 மிலி எக்காலக்ஸ் மருந்தை கலந்து தெளிக்கவேண்டும்.

ட்ரைகோடர்மா என்னும் முட்டை ஒட்டுண்ணியை எக்டருக்கு 50 என்ற அளவில் பூக்கும் தருணத்தில் இடவேண்டும்.

நாற்று அழுகள் நோய்

விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி என்ற விகிதத்தில் கலந்து விதை செய்நேர்த்தி செய்து விதைக்கவேண்டும். நாற்றங்காலில் நீர் தேங்கக்கூடாது.

ஒரு லிட்டர் தண்ணீரில் 2.5 கிராம் காப்பர், ஆக்சிகுளோரைடு கலந்து பாத்திகளில் ஊற்றவேண்டும்.

இலைச்சுருட்டு நச்சுயிரியை நோயைக் கட்டுப்படுத்த டைமீத்தோவேட் மருந்தினை 2 மில்லி /லிட்டர் என்ற விதத்தில் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

இந்த தொழில் நுட்பமுறைகளை பின்பற்றினால் ஒரு எக்டேருக்கு 35 முதல் 40 டன் பழங்களை மகசூல் பார்க்கலாம்.

click me!