பயிர்கள் செழித்து வளர முக்கியமாக மூன்று சத்துக்கள் தேவைப்படும்.
அவை 1.. தழைச்சத்து, 2.. மணிச்சத்து மற்றும் 3.. சாம்பல் சத்துக்களாகும்.
undefined
இதில் தழைச்சத்துக்கு அடுத்து முக்கிய பங்கு வகிப்பது மணிச்சத்தாகும்.
பாஸ்போ பாக்டீரியா உயிர் உரம்
பாஸ்போ பாக்டீரியா உயிர் உரம் இடுவதன் மூலம் பயிருக்கு மணிச்சத்து எளிதாக கிடைக்க வழிவகை செய்யலாம். இதனால், அதிக மகசூலையும் அடையலாம்.
பயன்கள்:
1.. தாவரங்களின் திசுக்கள், வேர்கள் செழித்து வளரவும் பயிர்களின் இனப்பெருக்கத்திற்கும், தரமான தானிய மகசூலுக்கும், தழைச்சத்தினை ஈர்க்கும் பணிக்கும் மணிச்சத்து மிகவும் இன்றியமையாதது ஆகும்.
2.. பாஸ்போபாக்டீரியா நுண்ணுயிரானது பயிருக்கு கிட்டா நிலையிலும், மண்ணில் கரையா நிலையிலும் உள்ள மணிச்சத்தினை, அங்கக அமில திரவங்களை சுரந்து அவற்றில் கரைய வைத்து பயிருக்கு எளிதாக கிடைக்கும் நிலைக்கு மாற்றுகின்றது.
3.. பாஸ்போ பாக்டீரியா இடுவதன் மூலம் எல்லா பயிர்களிலும் பத்து முதல் இருபது சதவீதம் வரை மகசூல் அதிகரிக்கின்றது.
4.. அசோஸ்பைரில்லம் மற்றும் ரைசோபியம் போன்ற தழைச்சத்து அளிக்க கூடிய உயிர் உரங்களுடன் பாஸ்போ பாக்டீரியாவை கலந்து இடும்போது தழைச்சத்தினை அதிக அளவில் ஈர்க்கும் பணியில் பயிர்களுக்கு உதவி புரிகின்றன.
5.. இதனால் உரச்செலவும் குறைய வாய்ப்பு உள்ளது.