அந்நிய பூமியில் பிறந்து, நீண்ட காலத்திற்கு முன்பே நம் மண்ணைப் புகுந்த இடமாகக் கொண்டுள்ள எங்கும் நிறைந்திருக்கும் ரோஜா மலர் சாகுபடி செய்வதற்கு உகந்ததாகும்.
வருடம் முழுவதும் இதன் தேவை மக்களுக்கு இருந்துக் கொண்டே இருக்கும். எல்லாப் பருவத்திலும் வீட்டின் தொட்டியில் கூட வளர்க்கலாம்.
பெண்கள் அதிகம் விரும்பும் இந்த ரோஜாவுக்கு மருத்துவ குணங்களும் அதிகம். நாட்டு வைத்தியத்திலும் சரி, வீட்டு வைத்தியத்திலும் சரி இதற்கு தனி இடம் உண்டு,
கற்கண்டுடன் தேன் சேர்த்து அன்றாடச் சூரிய வெயிலில் வைத்து எடுத்துக் கொண்டு காலை, மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு உற்சாகத்தையும், மனதுக்கு உல்லாசத்தையும் சிறப்பாகத்தந்து மகிழ்விக்கும்.
குழந்தைகளின் சீதபேதிக்கு இதனிடம் இருக்கும் துவர்ப்புச்சத்து மருந்தாகி குணமாக்குகிறது.
அஜீரணமா? வயிற்று வலியா? வேக்காளமா? அனைத்தும் இதனைத் தொகையலாக்கி உண்டாலே பறந்தோடும் என்பதை அனுபவித்துப் பார்த்தவர்களுக்கு நிச்சயம் தெரியும்.
அன்பிற்கு உரியோருக்கு தந்து ஆரத் தழுவ வைக்கும் இந்த ரோஜாவில் இருந்துதான் பன்னீர் தயாரித்து நம்மையும் நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளையும் மணக்க வைக்கிறது.
ரோஜா மலாராக சாகுபடி செய்தாலும், அதன் உற்பத்தி பொருளாக வைத்தாலும் சரி இதனால் நமக்கு லாபம் எப்போதும் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
அப்படிபட்ட லாபம் தரும் ராஜாவாக ரோஜா மலர் இருக்கிறது.
ரோஜா பயிரிடுபவரை மட்டுமல்ல அதனால் மருத்துவ ரீதியாக, மன ரீதியாக, அன்பின் ரீதியாக பயனடைபவர்களும் புன்னகை பூக்க வைக்கும் ரோஜா.