கோடைப் பருவத்தில் வெண்டையை காய்ப்புழுவின் தாக்குதலில் இருந்து காப்பற்ற இதை முயலுங்கள்…

First Published Apr 17, 2017, 10:36 AM IST
Highlights
In the summer season from the attack of boll ventaiyai try to save


கோடைப் பருவத்தில் வெண்டை பயிரில் காய்ப்புழு தாக்குதல் அதிகளவில் இருக்கும்.

அதிக வெப்பநிலை, காற்றில் அதிக ஈரப்பதம் உள்ள தற்போதைய சூழ்நிலையில் காய்ப்புழு தாக்குதல் அதிகரித்த இருக்கும்.

காய்ப்புழு தாக்குதலின் அறிகுறிகள்

1.. இளம் புழுக்கள் தண்டை துளையிட்டு கீழ்நோக்கி சென்று உள்ளே இருக்கும் திசுக்களை சாப்பிட்டு வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட தண்டு வாடி காய்ந்து விடுகிறது.

2.. பூ மொட்டுகள், பூக்கள், காய்களையும் புழுக்கள் துளையிட்டு சதைப்பற்றுள்ள பகுதி, விதைகளை உண்ணுகிறது.

3.. தண்டு, காய்களில் உள்ள துளை புழுக்களின் எச்சத்தால் நிரப்பப்பட்டுள்ளது.

4.. புழுக்களால் தாக்கப்படும் காய்கள் வளைந்து காணப்படுகின்றன. இந்த காய்களை சமையலுக்கு பயன்படுத்த முடியாது.

காய்ப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் விதம்

1.. காய்ப்புழுவால் தாக்கப்பட்ட தண்டு, பூ மொட்டுகள், பூக்கள், காய்களை பறித்து அழிக்க வேண்டும்.

2.. ஒரு எக்டேருக்கு 12 இனக்கவர்ச்சி பொறிகளை அமைத்து அந்துப்பூச்சியை கவர்ந்து அழிக்கலாம்.

3.. முட்டை ஒட்டுண்ணி டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் ஒரு ஹெக்டேருக்கு ஒரு லட்சம் என்ற அளவில் 15 நாட்கள் இடைவெளியில் 3 முறை விட்டு பூச்சியை கட்டுப்படுத்தலாம்.

4.. பச்சை கண்ணாடி இறக்கைப்பூச்சி என்ற இரை விழுங்கியை ஒரு எக்டேருக்கு 10 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் வயலில் விட்டு கட்டுப்படுத்தலாம்.

5.. பூ பூக்கும் பருவத்தில் வேப்பங்கொட்டை சாறு 5 சதவீதம் அல்லது கார்பரில் 2 கிராம் அல்லது மோனோகுரோட்டோபாஸ் 2 மி.லி., அல்லது புரபனோபாஸ் 2 மி.லி., மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து காலை, மலையில் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம்.

6.. செயற்கை பைரித்ராய்டு மருந்து தெளிப்பதை தவிர்க்க வேண்டும்.

 

click me!