முயல்களைத் தாக்கும் நோய்களும் அவற்றிற்கான சிகிச்சை முறைகளும்...

 |  First Published Mar 12, 2018, 1:48 PM IST
Rabbits attack diseases and treatments



முயல்களைத் தாக்கும் நோய்களும் அவற்றிற்கான சிகிச்சை முறைகளும்...

1. முயல் நச்சுயிரி நோய் வைரஸ் 

தெள்ளுப் பூச்சிக்கொசு போன்ற உயிரிகளால் பரவுகிறது.

கண்களில் எரிச்சல்,நீர் கோர்ப்பு, காதுகள், ஆசனவாய், பிறப்பு உறுப்புகளில் நீர் கோர்ப்பு, கண் இமையும், சவ்வும் வீங்குதல், தோலில் இரத்த ஒழுக்கு சரியான பலன் தரும் சிகிச்சைகள் கிடையாது. 

இந்நோய் தாக்கினால் 100 சதவிகிதம் இறப்பு நேரும். 

2. பாஸ்சுரேல்லா நுண்ம நோய் பாக்டீரியா (பாஸ்சுரெல்லா மல்டோசிடா) 

மூச்சு விட முடியாமை, குறிப்பிட்ட இடத்தில் குடல் அழற்சி, காது குருத்தெலும்பு சீழ்கட்டி, மேலும் இரத்தத்தில் நுண்ணுயிரிகள் பெருகும். 

சல்ஃபர் குயினாக்ஸலைன், சல்ஃபடிமிடின் கொண்டு தடுக்கலாம்.

3. இரத்தக் கழிச்சல் நோய் 

புரோட்டோசோவா எய்மெரியா மேக்னா எய்மெரிய பர்ஃபோ ரென்ஸ் எய்மெரியா ஸ்டெய்டே 

பசியின்மை, உடல் மெலிதல், வயிறு வீங்குதல் 

சல்ஃபர் குயினாக்ஸலைன், சல்ஃபமிடின் நைட்ரோ பியூரசோன் கொண்டு சிகிச்சை அளிக்கலாம்.

4. கோழை குடல் அழற்சி எதன் மூலம் பரவுகிறது என்பது தெளிவாக அறியப்படவில்லை 

வயிற்றில் கோழை, கட்டி, வயிற்றுப் போக்கு ஏற்படும். வயிறு உலர்ந்து போய்விடும். 

தடுப்பு முறைகள் ஏதுமில்லை. -

5. மடிவீக்க நோய் 

ஸ்டிரெப்டோ காக்கஸ், ஸ்டெஃபைலோ காக்கஸ் சிவந்த, ஊதா நிற நாளங்கள் எதிர் உயிர்ப்பொருள்.

6. காது சொறி 

சோரோஃபீட்ஸ் குனிகுளி 

தலையை ஆட்டுதல், காதுகளால் காதை பிராண்டுதல், காதிலிருந்து கெட்டியான திரவம் வழியும் பென்ஸைல் பென்ஸோயேட் (அஸ்காபியல்). 

காதை சுத்தப்படுத்திய பிறகு மருந்தளிக்க வேண்டும். -
 

click me!