வேப்ப மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பருத்தி மற்றும் புகை யிலைச் செடிகளை அழிக்கும் பூச்சிகளை அழிக்கிறது.
இதனை சோதனை முறையில் இந்தியா, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவில் பயன்படுத்தி அறிவியல் வல்லுநர்கள் வெற்றிகண்டனர்.
வேப்பமரம் சுற்றுப்புறச் சூழ்நிலையை பாதுகாக்கிறது. மண் அரிப்பு தடுக்கப்படுகிறது. அதிகமான வேப்ப மரங்கள் நடுவதால் பூமி குளிர்ச்சி அடைகிறது. எந்த சூழ்நிலை யிலும் வேப்பமர வளர்ச்சி பாதிப்பு அடைவது இல்லை. வேப்பமரம் மிக வேகமாக வளரும் மரமாகும். தொண்ணூறு அடி உயரம் வரை வளரும். பூமியின் பசுமையை காப்பாற்றும் மரம் வேப்ப மரமாகும்.
கனடாவில் உள்ள ஒட்டவா பல்கலைக்கழகம் விவசாய ஆய்வில் சிறப்பான இடத்தை வகிக்கிறது. அதில் பணியாற்றும் விஞ்ஞானி டாக்டர் ஜான் ஆர்னசான் வேப்ப மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கையான பூச்சிக் கொல்லி மருந்துகள் தற்போது சந்தையில் இடம் வகிக்கும் வேதியியல் பூச்சிக் கொல்லி மருந்துகளை பின்னுக்கு தள்ளிவிடும் என்கிறார்.
வேப்பமரத்தில் இருந்து தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தாவரங்களை அழிக்கும் பூச்சிகளை அவை கூட்டு புழு பருவத்தில் இருக்கும் போதே அழித்து விடுகிறது. வேப்பமரத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளித்தால் அம்மருந்தின் வாசனை இருக்கும் வரை பூச்சிகள் எந்த செடியினையும் அழிக்காமல் உள்ளது. மேலும் அப்பூச்சிகள் பட்டினியால் சாவதையும் கண்டார் டாக்டர் ஜான் ஆர்னசான்.
வேப்ப மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் ரசாயன பூச்சிக் கொல்லி மருந்தில் உள்ளடையதில் டால மேட்டை விட அதிக சக்தி வாய்ந்தவை யாகும்
இத்தகு கண்டுபிடிப்புகளின் பலனாய் வேப்ப மரத்தின் முக்கியத்துவம் வியாபார முக்கியத்துவம் அடைந்து விட்டது. ரசாயன பூச்சி மருந்துகளை பயன்படுத்துவதால் ஆண்டுக்கு இருபது ஆயிரம் பேர் மரணம் அடைகின்றனர் பத்து லட்சம் பேர் நோயால் பாதிக்கப்படுகின்றனர் என கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞான டாக்டர் மர்ரே இஸ்மான் கூறுகிறார்.