வீட்டில் வளர்க்கும் ரோஜாச் செடிகள் மீது அதிக கவனம் செலுத்த சில யோசனைகள்:
ரோஜாச் செடியின் இருப்பிடத்தை அடிக்கடி மாற்றக்கூடாது.
உச்சி வெயிலில் ரோஜாச் செடி இருக்கக் கூடாது.
காலை - மாலை இரண்டு வேளையும் ரோஜாச் செடிகளுக்கு அவசியம் தண்ணீர்விடுங்கள்.
மதிய வேளையில் கண்டிப்பாக தண்ணீர் ஊற்றக்கூடாது.
ரோஜாச் செடியின் அகலம் 70 செ.மீ. இருக்க வேண்டும்.
தொட்டியில் சிறுசிறு துளைகள் போட்ட பின் மணல் நிரப்பி ரோஜாச் செடியை வையுங்கள்.
ரோஜாச் செடிகளின் மேல் தண்ணீர் ஊற்றக்கூடாது.
எல்லாத் தண்ணீரிலும் சிறிது உப்பு இருக்கும். அதுபடிந்து இலைகளின் சுவாசத் துளைகளை அடைத்தால் நாளடைவில் செடி பட்டுப்போகும்.
முட்டை ஓடு, பயன்படுத்திய தேயிலை, பூண்டு, வெங்காயச் சருகுகள் போடலாம்; நல்ல பலன் கிடைக்கும்.
ரோஜாச் செடி நிறையப் பூக்கள் பூக்க பீட்ரூட்டின் தோலையும், வேக வைத்த உருளைக்கிழங்கின் தோலையும் உரமாகப் போட வேண்டும்.
ரோஜாச் செடிகளுக்குப் பக்கம் எறும்பு புற்று இருந்தால் அதில் சிறிது பெருங்காயத் தூளை தூவினால் போதும்.