பனிக் காலங்களில் செம்மறி ஆடுகள் மீது அதிக கவனம் செலுத்தணும். ஏன்?

 |  First Published Sep 13, 2017, 12:32 PM IST
Pay attention to sheep in sheep during the winter times. Why?



1.. பனி அதிகமான காலங்களில் செம்மறி ஆடுகளை பனிக்கால நோய்களிலிருந்து பாதுகாப்பதற்கு ஆட்டுப்ப ட்டி பராமரிப்பு மிக முக்கியகும்.

2.. பட்டி சரியாக அமைக்காவிட்டால் ஆடுகளுக்கு சளி, இருமல், வாய்ப்புண் நோய், புழு புண், குட்டிகளில் வளர்ச்சி குன்றுதல் காரணமாக ஆடுகள் இறந்து போக வாய்ப்புள்ளது. இதனல் ஆடு வளர்க்கும் விவசாயிகளுக்கு பொருளாதார நஷ்டம் ஏற்படும்.

Latest Videos

undefined

3.. இவற்றை தடுக்க ஆடுகள் எண்ணிக்கைக்கு ஏற்ப பட்டி தரம்புகள் விசாலமாக அமக்க வேண்டும். குறைந்த பட்சம் ஒரு ஆட்டுக்கு 4 சதுர அடி இடைவெளி விட வேண்டும்.

4.. பட்டிக்கு மூன் றில் ஒரு பங்கு அளவு மட் டும் சாக்கு படுதா போடுதல் போதுமானது.

5.. காலையில் பட்டிக்குள் இளம் வெயில் விழும்படி கிழக்குப் பகுதியில் வெற்றிடம் விட வேண்டும்.

6.. தென்னந்தோப்பு, மாந்தோப்பு போன்ற ஈரப்பதமான இடங்களில் பட்டி அமைக்கக் கூடாது. மேடான இடத்தில் பட்டி அமைக்க வேண்டும்.

7.. பட்டி தரம்புகளின் சுற்றுப்பகுதி, சாலை மற்றும் பெரிய ஆடுகளின் மீதும் 15 நாட்களுக்கு ஒரு முறை பியூடாக்ஸ் எனும் மருந்தை ஒரு லிட்டர் நீரில் ஒரு மில்லி கலந்து கை தெளி ப்பான் மூலம் தெளிப்பது நல்லது. இதனால் வாய்ப்புண் நோயை பரப்பும் பூச்சிக்கடி மற்றும் புற உண்ணிகளை தவிர்க்கலாம்.

8.. மாலையில் வேம்பு, யூக்கலிப்டஸ், தும்பை மற்றும் இலை சருகுகள் கொண்டு பட்டிக்கு புகை போடலாம். இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து ஆடு வளர்க்கும் விவசாயிகள் ஆடுகளை இந்த பனிக்கால நோய்களிலிருந்து பாதுகாத்து நட்டத்தை தவிர்த்துக் கொள்ளலாம்.

click me!