தமிழகத்தில் பப்பாளி சாகுபடி தற்போது பழச் சந்தைக்காகவும், பால் எடுப்பதற்கும் பிரபலமாகி வருகிறது.
உழவர்களுக்கு நிகரலாபம் அதிகமாக கிடைப்பதால் ஒப்பந்த அடிப்படையில் பெருவாரியான மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பப்பாளி சாகுபடி கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல், வேலூர் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பப்பாளியில் சிவப்பு சதைப்பற்றுள்ள உயர் விளைச்சல் தரக்கூடிய ஒரு பாலின ரகம் கோ.8. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ளது.
இது பழமாக உண்பதற்கும் பால் எடுப்பதற்கும் உகந்தது.
பப்பாளி வளையப்புள்ளி நச்சுயிரி மேலாண்மை உத்திகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
அவை:
1.. மக்காச்சோளத்தை வரப்பு பயிராக ஒரு மாதத்திற்கு முன் வயலில் நடவு செய்தல்.
2.. பப்பாளி நாற்றங்காலை பூச்சி புகாத குடில்களில் வளர்த்தல்.
3.. நடவு செய்த நான்காவது, ஏழாவது மாதங்களில் நுண்ணூட்டக்கலவை (சிங்க் சல்பேட் 5 கிராம்/ லிட்டர், போராக்ஸ் 1 கிராம்/லிட்டர்) இலை வழியாக தெளித்தல்.
4.. மாதம் ஒரு முறை ஊடுருவிப்பாயும் பூச்சிக்கொல்லி மருந்தான டைமீத்தோயேட் 1 கிராம்/லிட்டர் என்ற அளவில் தெளித்தல்.