விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை, ஸ்ரீசாரதா ஆசிரமம் பாரம்பர்ய இரக நெல் விதைகளைச் சேகரித்துப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 175 பாரம்பரிய நெல் இரகங்கள் இங்குள்ளன.
விவசாயிகளின் மண் வளத்துக்கேற்ப விதைகள் பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக வெள்ளைப்பொன்னி, சிகப்புக் கவுனி, கொட்டாரச் சம்பா, சீரகச்சம்பா, கந்தசாலா, பனங்காட்டுக் குடவாழை, சன்னச் சம்பா, காலா நமக், ஜவ்வாதுமலை நெல் உள்ளிட்ட அரியவகை பாரம்பர்ய நெல் வகைகள் சிறப்பு பெற்றவை. விவசாயிகளுக்கு கிலோ 40 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.