மழைநீரில் இருந்து மின்சாரம் – தொழில்நுட்பம் தெரிஞ்சுக்கங்க…

 |  First Published Oct 6, 2016, 8:43 AM IST



மழை பெய்தால் அந்த இடமே ஈரமாகி விடுகின்றன. அதனால் சில பேர் மழை வருவதை விரும்ப மாட்டார்கள். ஆனால் விவசாயம் செய்யும் மக்கள் மழை வருகிறது என்றால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஏனென்றால் மழை வந்தால் தான் பயிர்கள் செழிப்பாக வளரும் என்று எண்ணுகிறார்கள். அதனால் விவசாயிகள் மழையை அதிகமாக நேசிக்கின்றனர்.

மழை வெறும் விவசாயத்துக்கு மட்டும் பயன் தருவதில்லை. மழை நீரில் இருந்து மின்சாரமும் எடுக்கலாம் என்று மெக்ஸிக்கோ தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உள்ள மூன்று மாணவர்கள் இந்த சாதனையை செய்துள்ளனர். இதனை ப்ளுவியா அமைப்பு என்று அழைக்கிறார்கள்.

Tap to resize

Latest Videos

குறைந்த வருமானம் உள்ள வீடுகளுக்கு இந்த மின்சாரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அந்த மாணவர்கள் கூறுகிறார்கள். வீட்டு கூறையின் மேல் இருந்து வரும் தண்ணீர் மைக்ரோ விசையாழியினுள் சென்று சுற்றுகிறது.

அவ்விசையாழியின் மூலம் சுற்றப்பட்ட தண்ணீரிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது 12 வோல்ட் பேட்டரிகளுக்கு சார்ஜ் செய்யப் பயன்படுகிறது. இந்த மின்சாரம் LED விளக்குகள் மற்றும் வீட்டில் உள்ள சிறிய உபகரணங்களுக்கு பயன்படுகிறது.

இந்த ப்ளுவியா அமைப்பு மெக்ஸிக்கோ தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சோதனை செய்து பார்க்கப்பட்டது. அந்த பல்கலைக்கழகம் இந்த மின்சாரத்தை தயாரிக்க அனுமதி வழங்கியது. இந்த மின்சாரம் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

click me!