கற்பூரவள்ளி வாழை எப்போதும் கைவிடாது…

 |  First Published Jan 9, 2017, 1:30 PM IST



இந்தியாவிலுள்ள வாழை இரகங்களிலேயே அதிக இனிப்புச்சுவை கொண்டது கற்பூரவள்ளி. பழங்களின் தோலின் மேல் சாம்பல் படிந்தது போல் காணப்படும். பழங்கள் திண்ணமாகவும், பழுத்த பின்பும் காம்புடன் ஒட்டிக் கொண்டும் இருக்கும் தன்மை கொண்டவையாக இருப்பதால் எளிதில் அழுகுவதில்லை.

கற்பூரவள்ளியின் அடிமரம் பெருத்தும், மரம் உயரமாகவும் இருக்கும். இலைகள் மிக நீளமாகவும், அகலமாகவும் வளரக்கூடியவை என்பதால் இலை வாழைக்கு மிகவும் ஏற்றது. கற்பூரவள்ளி நடுவதற்கு பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை ஏற்ற மாதங்களாகும்.

Tap to resize

Latest Videos

நட்ட 12 மாதங்களில் அறுவடை செய்யலாம். நல்ல வடிகால் வசதியுடன் கூடிய தோட்டக்கால் மண் சிறந்தது. ஆனால் நடைமுறையில் விவசாயிகள் களிமண் நிலத்தில் கூட கற்பூரவள்ளி நட்டு வெற்றி பெற்றுள்ளனர். சற்று களர் தன்மையான மண்ணில் கூட பயிரிடலாம்.

நிலத்தை மூன்று உழவு ஓட்டிய பின் ஏக்கருக்கு 10 டன் தொழுவுரம் 4 கிலோ அசோஸ்பைரில்லம் 4 கிலோ பாஸ்போ பேக்டீரியா, இட்டு 8 அடி இடைவெளியில் பார்கள் அமைத்து மரத்துக்கு மரம் 5 அடி இடைவெளியில் ஒரு வாழைக்கன்றை நட வேண்டும். சொட்டு நீர் அமைத்துக் கொண்டால் மிகச் சிறந்தது. நீர் மற்றும் உர விரயத்தை தடுக்கலாம்.

நடுமுன் வாழைக்கிழங்கை தெறிவு செய்யும்போது மிகச் ஜாக்கிரதையாக வாடல் நோய் தாக்காத தோப்பிலிருந்து தெறிவு செய்து கொள்ளுங்கள். வாடல் நோய் தாக்கிய வாழையின் தண்டு வெடித்தும், இலைக் காம்புகள் உடந்து, இலைகள் பழுத்துத் தொங்கியும் காணப்படும். வாழை கிழங்கை குறுக்காக வெட்டிப் பார்த்தால் இள்ஞ்சிவப்பு மற்றும் கருப்பு நிறமாகவும் காணப்படும்.

வாழை கிழங்கை நடுமுன், எமிசான் என்ற மருந்தை 1 லிட்டர் நீரில் 1 கிராம் என்ற அளவில் கரைத்து அதில் வாழைக்கிழங்கை முழுவது நனையுமாறு 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு கட்டியாக கரைத்த சாணிக் கரைசலில் கிழங்கை முக்கி எடுத்து, அதன் மேல் 5 கிராம் பியுரடான் குருணையைத் தூவி பிறகு நட வேண்டும்.

நட்ட 3 வது, 5வது, 7வது மாதங்களில் சீப்புக்கு சுமார் 20 காய்களும் பெற முடியும். ஒரு ஒவ்வொரு முறையும் 1 லிட்டர் நீருக்கு 5 கிராம் தார் ரூபாய் 200 விலை போனால் கூட செலவு போக குறைந்தபட்சம் ரூபாய் 1.5 இலட்சம் லாபமாகப் பெறலாம்.

சிங்க் சல்பேட், 2 கிராம் பெர்ரஸ் சல்பேட், 3 கிராம் போராக்ஸ், 10 கிராம் பொட்டாசியம் நைட்ரைட் இவற்றை கரைத்து இலைகளில் நன்கு படுமாறு தெளிக்க வேண்டும். 7 மாதத்திற்கு பிறகு பஞ்சகாவ்யா தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

1 லிட்டர் பஞ்சகாவ்யாவுடன் 3 கிராம் போராக்ஸ் கரைத்து தாரின் மீது 20 நாட்களுக்கு ஒரு முறை அடிக்க வேண்டும். வாழை நட்டதிலிருந்து 3 மாதம் வரை உளுந்து, பாசிப்பயிறு, நிலக்கடலை போன்ற பயிர்களை ஊடுபயிராக பயிர் செய்து உபரி இலாபம் எடுத்துக் கொள்ளலாம்.

தேவையில்லாத பக்கக் கன்றுகளையும் இலைகளையும் அவ்வப்போது கழித்து வாழை தோப்பை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பக்கக் கன்றை மட்டும் மருதாம்புக்காக விட்டுவிடவும்.

மேற்கூறிய முறைகளைக் கடைபிடித்து பயிர் செய்தால் ஒரு ஏக்கரில் நட்ட 1000 மரங்களில் குறைந்தபட்சம் 950 தரமான தார்களை பெற முடியும். ஒவ்வொரு தாரிலும் 12 முதல் 15 சீப்புகளும், ஒரு சீப்புக்கு சுமார் 20 காய்களும் பெறமுடியும்.

click me!