இலாபம் தரும் குண்டு மல்லி…

 |  First Published Jan 9, 2017, 1:24 PM IST



திருவள்ளூர் மாவட்டத்திற்கு கீழ் வரும் ஊத்துக்கோட்டை, பால்ரெட்டி கண்டிகை ஆகிய கிராமங்கள் மல்லிகை சாகுபடியில் பெயர் பெற்று விளங்குகின்றன. இங்குள்ள மண்வளம் மற்றும் நீர்வளம் மல்லிகை சாகுபடிக்கு ஏற்றதாக மட்டுமல்லாமல், விளையும் பூக்களை சென்னைக்கு எடுத்துச் சென்று விற்பதற்கும் வசதியாக இருக்கிறது.

மலர்களுள் மகாராணி மல்லிகை ஆகும். இம்மல்லிகை அனைத்து தேவைகளுக்கும் மிக அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இம்மல்லிகை தினசரி வருமானம் தரும் அற்புத காமதேனு பயிராகும். திருமணம் மற்றும் திருவிழா நாட்களில் அதிக விலை கிடைக்கும். முகூர்த்த நாட்களில் கிலோ ரூபாய் 1000 கூட எட்டிப்பிடிக்கும்.

Latest Videos

undefined

இம்மல்லிகைப் பயிர் சூரிய ஒளியை விரும்பும் பயிர். அதனால் மழைக் காலங்களில் மகசூல் குறைவாக இருக்கும். அப்பொழுது விலை மிக அதிகமாகக் கிடைக்கும்.

இம்மல்லிகை மலர்களிலிருந்து நறுமணப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு, வெளி நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.

ஊத்துக்கோட்டை, சென்னைக்கு அருகில் இருப்பதாலும் , மிகப் பெரிய மலர்ச்சந்தை கோயம்பேட்டில் இருப்பதாலும், ஊத்துக்கோட்டை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் விவசாயிகள் மல்லிகை பயிரிட்டு வருகின்றனர்.

“மல்லிகை, சீசனில் மட்டுமே பூக்கும் என்கிற காரணத்தால், நல்ல வெயிலடிக்கும் காலங்கத்தில் மட்டுமே பூக்கும். மழை காலத்துல பூ வராத. மற்ற பயிருகளைக் காட்டிலும், மல்லிகை சிறப்பான பயிர். மல்லிகை பூ விற்பதில் பெரிய பிரச்சனை இல்ல.

மல்லிகைக்குத் தேவையான பூச்சி மருந்துகளை வாங்குவதும் சுலபம். மல்லிகையைப் பொறுத்த வரை தினமும் பறிச்சி மார்க்கெட்டுக்கு அனுப்பலாம்.

உரத்தை பொறுத்த வரைக்கும் ஸ்பிக் 20:20 அடிக்கடி வைக்கலாம். ”ஸ்பிக் எம்பவர்” என்கிற குருணை மருந்து மார்க்கெட்ல வந்துள்ளது. பூ குறைஞ்சதுன்னா 5 கிலோ ஸ்பிக் எம்பவர் வாங்கிட்டு வந்து தூருக்கு தூர் வைத்தால் மறுபடியும் பூ எடுக்க ஆரம்பிக்கும்”.

வருடத்தில் 12 மாதங்களும், மல்லிகைச் செடியை பராமரித்தே ஆகவேண்டும். 10 ரூபா செலவு பண்ணாம 20 ரூபா எடுக்க முடியாது. 25 செண்ட் மல்லிகை பயிர் பண்ணினால். உரம் பூச்சி மருந்து கொடுப்பது மட்டுமில்லாமல் 2 மாதத்துக்கு ஒரு முறை “ஸ்பிக் எம்பவர்” 5 கிலோ போட வேண்டும். இன்னும் 10 சேர் கூட பூ வரல. (ஒரு சேர் என்பது 300 கிராம் ஆகும்).

இந்த 1/4 ஏக்கர்ல இருந்து 15 சேர் பூவ எதிர்பார்க்கலாம். ஒரு சேர் 20 ரூபாய்க்கு விற்றால்கூட தினமும் கைக்கு 300 ரூபா கிடைக்கும்.

நல்ல பூ வரத்து வரும்போது இதே 1/4 ஏக்கர்ல இருந்து, 50-ல் இருந்து 100 சேர் வரைக்கும் பூ எடுக்கலாம். கார்த்திகையில், மழைகாலம் என்பதால் ஒரு சேர் ரூவா 300 – 400 வரைக்கும் விற்கும்.

click me!