மரவள்ளியின் மகசூல் பாதிக்க பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அதில் மிகவும் குறிப்பாக மரவள்ளியில் நுண்ணூட்டப் பற்றாக்குறை ஏற்பட்டால் மகசூல் வெகுவாக பாதிக்கும்.
இந்தப் பற்றாக்குறையைச் சரி செய்ய, ஒரு லிட்டர் நீருக்கு 10 கிராம் ஃபெர்ரஸ் சல்பேட் மற்றும் 5 கிராம் சிங்க் சல்பேட் என்ற அளவில் கரைத்து 60 வது மற்றும் 70 வது நாட்களில் தெளிக்க வேண்டும்.
அவ்வாறு தெளிப்பதன் மூலம் நுண்ணூட்டப் பற்றாக்குறையை சரி செய்து மரவள்ளியில் நல்ல மகசூல் பார்க்கலாம்.