வெங்காயத்தை தாக்கி, நட்டத்தை தரும் இலைப்பேனை ஒழிக்கனுமா?

 |  First Published Feb 20, 2017, 12:01 PM IST



வெங்காயப் பயிரில் இலைப்பேன் தாக்குதலால், இலை முழுவதும் வெண் திட்டுக்கள் காணப்படும்.

தாக்கப்பட்ட இலையின் நுனியில் இருந்து காயத் தொடங்கும். இலைகளை வெண்ணிற அட்டையின் மீது தட்டினால் சிறிய மெலிந்த வெளிர் மஞ்சள் மற்றும் சாம்பல் நிற இலைப்பேன்கள் நகர்ந்து செல்லும்.

Latest Videos

undefined

1.. வயலை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு சீரான இடைவெளியில் களை எடுக்க வேண்டும்.

2. தாக்குதல் தீவிரமாக இருந்தால், ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு மில்லி டைமீதோயேட் கலந்து தெளிக்கலாம் அல்லது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி புரேபினோபாஸ் மருந்து கலந்து, கைத்தெளிப்பான் மூலம் இலைகளில் திரவம் படும்படி தெளிக்கலாம்.

3. வெங்காய ஈ தாக்குதலால் இலைகள் வாடும். இலைகள் தளர்வுற்று வெங்காய குமிழ்கள் வளர்ச்சி சிதைந்து திசுக்கள் அழுகிவிடும். இதற்கு சீரான பயிர் சுழற்சி முறையை பின்பற்ற வேண்டும்.

4. ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி மாலத்தியான் மருந்து கலந்து தெளிக்கலாம்.

5. அடித்தாள் அழுகல் நோயில் இலை மஞ்சள் நிறமாக மாறி, நுனியிலிருந்து கீழ் நோக்கி காயும். செடியின் இலைப்பரப்பு முழுதும் வாடும்.

6. வெங்காய குமிழ் மென்மையாகி அழுகும்; வேர்கள் அழுகும். அறுவடை செய்த வெங்காய குமிழ்களை சுத்தமாக சேமிக்க வேண்டும்.

7. மண்ணில் தாமிர அளவு குறையும் போது நோய் தாக்குதல் ஏற்படும். ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டரை கிராம் காப்பர் ஆக்சிகுளோரைடு மருந்து கரைத்து மண்ணில் ஊற்றலாம்.

click me!