தென்னியில் பயிர் நிர்வாகம்
1.. மண் வகைகள்
செம்மண், வண்டல் மண், மணல் கலந்த செம்மண் மற்றும் அமிலத்தன்மை கொண்ட லேட்டரைட் எனப்படும் மண் வகை தென்னை சாகுபடிக்கு ஏற்றது.
அதிக களிமண் மற்றும் வடிகாலில்லாத மண் வகைகள் தென்னை சாகுபடிக்கு ஏற்றதல்ல.
2. நடவு பருவங்கள்
ஆடி மற்றும் மார்கழி மாதங்கள், பாசன மற்றும் வடிகால் வசதியுள்ள இடங்களில் மற்ற மாதங்களிலும் நடலாம்.
3. நடவு இடைவெளி
25 அடிக்கு 25 அடி (7.5 ஒ 7.5 மீ) என்ற கணக்கில் நடவு செய்யலாம். இதனால் ஒரு எக்டர் நிலப்பரப்பில் 175 தென்னங்கன்றுகள் நடலாம். ஓரக்கால்களில் நடவு செய்ய 20 அடி இடைவெளி போதுமானதாகும்.
4. நடவு முறை
3 அடி நீள, அகல, ஆழ குழிகள் தோண்டி அதிலே 1.3 சதவீதம் லிண்டேன் தூள்களை தூவிவிடவேண்டும். அந்தக்குழியை 2 அடி உயரத்திற்கு (60 செ.மீ) மக்கிய தொழு உரம் செம்மண் மற்றம் மணல் ஆகியவற்றை சமமாகக் கலந்து நிரப்பவேண்டும்.
வெளித்தோன்றும் வேர்கள் அனைத்தும் நீக்கப்பட்ட தென்னங்கன்றுகளை குழியின் நடுவே மண் கலவையை எடுத்து விட்டு நடவு செய்யவேண்டும். நாற்றையும் அதனுடன் கூடிய தேங்காயையும் மண் அணைப்பு செய்து சுற்றிலும் அழுத்திவிடவேண்டும்.
நட்ட கன்றுகளுக்கு பின்னிய தென்னை ஓலை அல்லது பனை ஓலை கொண்டு நிழல் அமைத்துத் தரவேண்டும்.
தென்னங்கன்றுகளைச் சுற்றி சேரும் மண்ணை அடிக்கடி அப்புறப்படுத்தவேண்டும். வருடாவருடம் வட்டப்பாத்தியை அகலப்படுத்தவேண்டும்.
5. நீர் மேலாண்மை
ஐந்தாம் ஆண்டு முதல் தென்னங்கன்றுகளுக்கு நீர் ஆவியதாலுக்கேற்ப கீழ்க்காணும் நீர் மேலாண்மைத் திட்டத்தை சொட்டு நீர்ப்பாசனம் அல்லது வட்டப்பாத்தி பாசனம் மூலம் கடைப்பிடிக்கலாம்.