செடி முருங்கையைத் தாக்கும் “பழ ஈக்கள்”–ஐ எப்படிக் கட்டுப்படுத்துவது?

 |  First Published Apr 5, 2017, 12:29 PM IST
Murunkaiyait plant hit fruit flie on how to activate



“ட்ரோசொமிலா” என்ற சிறிய வகை பழ ஈக்கள் முருங்கைப் பிஞ்சுகளை தாக்கி சேதம் விளைவிக்கும்.

மஞ்சள் நிறத்தில், சிவப்பு நிற கண்களை கொண்ட இந்த ஈக்கள், 1 மில்லி மீட்டர் முதல் 2 மில்லிமீட்டர் அளவுள்ள மிகச்சிறிய ஈக்கள் முருங்கை பிஞ்சுகள் காய்த்து வளர ஆரம்பிக்கும்போது பிஞ்சுகள் காய்த்து வளர ஆரம்பிக்கும் போது பிஞ்சுகளின் மெல்லிய தோல்களில் முட்டையிடும்.

Tap to resize

Latest Videos

இரண்டு, மூன்று நாட்களில் வெளிவரும் கால இல்லாத வெண்மைநிற புழுக்கள் திசுக்களை சாப்பிடும். இந்த தாக்குதல் பிஞ்சின் நுனிப்பகுதியில் இருந்து தொடங்கும்.

தாக்கிய பகுதிகளில் இருந்து காபி நிறத்தில் பிசின் போன்ற திரவம் வடிய தொடங்கி, நுனிப்பகுதியை மூடிவிடும்.  எனவே தாக்குதலுக்குள்ளான முருங்கைக்காய் பிஞ்சுகள் சுருங்கி, வெம்பி, அழுகி காய்ந்து விடும். காய்களில் பிளவுகள், துரநாற்றம் வீசும்.

7 முதல் 10 நாட்கள் வரை வளர்ந்த புழுக்கள் காய்களில் இருந்து நிலத்தில் விழுந்து கூட்டுப்புழுக்களாக மாறி, அடுத்து காய்க்கும் பருவம் வரை நிலத்தில் உறக்க நிலையில் இருக்கும். கூட்டுப்புழுக்கள் தாய் ஈக்களாக மாறி மீண்டும் சேதத்தை விளைவித்து வாழ்க்கை சுழற்சியை தொடங்கும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

1.. பாதிக்கப்பட்ட பிஞ்சுகளை முழுவதுமாக சேகரித்து மண்ணில் புதைத்தோ, அல்லது நன்கு தீயிட்டு எரித்து விட வேண்டும்.

2.. மண்ணில் கூட்டுப்புழுக்களை வெளிக்கொண்டுவர இரண்டு அல்லது மூன்று முறை உழவு செய்து காய விட வேண்டும்.

3.. காய்களின் மீது ஈக்கள் அமர்ந்து முட்டையிடுவதை தடுக்க 3 சதவீத வேப்ப எண்ணை கரைசல் தெளிப்பு செய்ய வேண்டும்.

4.. முருங்கை பூக்கும் தருணம், மாலத்யான் 2 மில்லி மருந்துக்கு ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

5.. பிஞ்சு வளர ஆரம்பித்த 20 முதல் 30 நாட்களில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி அளவு பென்தியான் அல்லது ஒரு லிட்டருக்கு 2 கிராம் கார்பரில் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

6.. பின்னர் 15 நாட்கள் இடைவெளி கழித்து டைகுளோர்வாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

7.. மருந்து தெளித்த ஒரு வார காலத்திற்கு காய்களை அறுவடை செய்யக்கூடாது.  ஏனெனில் பூச்சி மருந்தின் எஞ்சிய நஞ்சின் வீரியம் நமது உடல் நலத்தை பாதிக்கும்.

 

click me!