நாட்டுக்கோழிகளை பராமரிப்பது ஒன்றும் சுலபமில்லை; கண்ணும் கருத்துமாக இருக்கணும்...

First Published Mar 15, 2018, 1:45 PM IST
Highlights
Nothing is easier to maintain the countryside Be careful


நாட்டுக்கோழி பராமரிப்பு 

இளம் நாட்டுகோழி குஞ்சுகள் பராமரிப்பு ( 1 - 7 வாரம்)

குஞ்சுகளை பெறுவதற்கு முன் கொட்டகைகளில் அடைப்பான்களை அமைக்க வேண்டும். ஒருஅடைகாப்பானில் அதிகபட்சமாக 250 – 300 குஞ்சுகளை வைத்து வளர்க்கலாம். முதல் வாரத்தில் 95 பாரன்கீட்என்றளவில் வெப்பம், பிறகு ஒவ்வொரு வாரமும் 5 பாரன்கீட் என்றளவில் வெப்பத்தை குறைத்து கொடுக்க வேண்டும்.

குஞ்சு பருவ தீவனத்தை கொடுத்து வளர்க்க வேண்டும். சுடவைத்து ஆற வைத்த தண்ணீரை குஞ்சுகளுக்கு கொடுக்கவேண்டும். நியோ மைசின், டாக்சி சைக்லின், செபலேக்சின் போன்ற கோழி குஞ்சுகளுக்கு நோய் பாதிப்பை தடுக்ககொடுக்கப்பட வேண்டும்.

வளர் நாட்டுகோழி பராமரிப்பு (8 - 18 வாரம்)

இப்பருவத்தில் கோழிகளுக்கு கொடுக்கப்படும் தீவனத்தில் புரதசத்தின் அளவு சதவீதம் இருக்க வேண்டும்.எரிசக்தியின் அளவு 2700 கிலோ கலோரியாகவும் , நார் சத்தின் அளவு 8 சதவீதத்திற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். 17 வது வார துவக்கத்தில் பேன், செல் போன்ற வெளிப்புற ஒட்டுண்ணிகள் காணப்பட்டால் அதை ஒழிப்பதற்கு

 1-2 மி.லி டெல்டா மெத்திரின் என்ற மருந்தை (பியுட்டாக்ஸ்) லிட்டர் தண்ணீர் கலந்து கோழிகளின் தலைப்பகுதிதவிர முக்கி எடுத்தல் வேண்டும். மேலும் கொட்டகைகளிலும் தெளித்து விட வேண்டும். 

இந்த மருந்து கோழிகளைவெயில் அடிக்கும் மதிய வேளையில் மேற்கொள்ள வேண்டும். பருவநிலை மாற்றத்தின் போது கோழிகளின் சுவாசகோளாறு ஏற்ப்பட்டால் என்ரோ பிலாக்சசின் மில்லி /கோழி என்ற அளவு தண்ணீரில் கொடுக்க வேண்டும்.

முட்டையிடும் நாட்டுக்கோழி பராமரிப்பு ( 18 வாரம் முதல் )

ஒரு கோழி ஒரு வருடத்தில் சுமார் 60 முதல் 80 முட்டைகள் வரை இடும். ஒரு பருவத்தில் 12 – 18 முட்டைகள்இடும். கலப்பின நாட்டுக் கோழியான நாமக்கள் கோழி 1 240 - 280 முட்டைகள் வரை இடும். இப்பருவத்தில் 18 சதவீதபுரதமும், 2700 கிலோ கலோரி எரிசக்தி தீவனம் அளித்தல் வேண்டும். ஒரு முட்டை கோழி தினமும் 240 – 300 மி.லிட்டர்தண்ணீர் குடிக்கும்.
 

click me!