சின்ன வெங்காயத்தை ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்தால், விவசாயிகள் அதிக லாபம் அள்ளலாம்.
தமிழகத்தில் ஆடிப்பட்டத்தில் மானாவாரி பயிர்களை சாகுபடி செய்வது வழக்கமாக நடந்து வருகிறது. தென்மேற்கு பருவமழை மானாவரி பயிர்களின் உற்பத்தியை தீர்மானிக்கிறது.
கடந்த வருடம் மழை பொய்த்துப் போனதால், நடப்பாண்டு பருவமழை இயல்பாக இருக்கலாம். சின்ன வெங்காய உற்பத்தி அதிகளவில் இருக்கும்.
நடப்பாண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை சின்ன வெங்காயத்தின் பண்ணை விலை ஒரு கிலோவுக்கு 10 ரூபாய் முதல் 15 ரூபாய் என இருந்தது.
நடவு காயின் விலை ஒரு கிலோவுக்கு 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையிலும் உள்ளது.
வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களுக்காக சந்தையில் விற்பனை செய்ய ஆடிப்பட்டத்தில் சின்ன வெங்காயத்தை நடவு செய்தால், விலை ஆய்வுகளின்படி வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சின்ன வெங்காயத்தின் பண்ணை விலை 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
எனவே, விவசாயிகள் ஆடிப்பட்டத்தில் சின்ன வெங்காயத்தை சாகுபடி செய்து லாபம் அள்ளலாம்.