தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் பயிர்களைத் தாக்கும் முக்கிய நூற்புழுக்கள்:

 |  First Published Mar 25, 2017, 1:26 PM IST
Nematodes that attack major crops grown in the state



பல செல் உயிரினங்களில் எண்ணிக்கையின் அடிப்படையில் அதிகமாகக் காணப்படும் உயிரினமான “நூற்புழு” பூமியில் எங்கும் நிறைந்துள்ளது. தாவர நூற்புழுக்கள் நீளம் சுமார் 1 மி.மீ. முதல் 10 மி.மீ. வரை இருக்கும். இவை மண்ணிலும் செடியின் வேர் பகுதியிலும் மறைந்து வாழ்கின்றன.

நூற்புழுக்களுக்கு ஊசி போன்ற அலகு உண்டு. அத்தகைய அலகைக் கொண்டு நூற்புழுக்கள் பயிர்களின் வேர் பகுதியிலுள்ள செல் சாற்றை உறிஞ்சிக் குடிக்கும்.

Tap to resize

Latest Videos

மேலும் அலகினால் வேரைத் துளைக்கும்போது எண்ணற்ற காயங்களையும் வேரில் உண்டு பண்ணுகிறது.

தமிழகத்தில் இதுவரை 90க்கும் மேற்பட்ட நூற்புழுக்கள் பயிர்களைத் தாக்கி சேதத்தை ஏற்படுத்தி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் முக்கிய பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்கள்:

வேர்முடிச்சு நூற்புழு:

பொதுவாக வேர்முடிச்சு நூற்புழுக்கள் அனைத்து விதமான பயிர்களையும் குறிப்பாக காய்கறிப் பயிர்களைத் தாக்குகின்றன. இந்நூற்புழுக்கள் வேரின் உள்ளே புகுந்து பயிரினைப் பெரிதும் பாதிக்கின்றன.

இரண்டாம் நிலை நூற் புழுக்கள் வேரினுள் புகுந்தபின் கார்டக்ஸ் பகுதியில் செல் சாற்றை உறிஞ்சுவதால் செல்களில் மாற்றம் உண்டாகும். அதனால் செல்கள் அதிக எண்ணிக்கையில் உற்பத்தியாகி அதிக பருமனுடன் காணப்படும்.

வளருகின்ற பெண் நூற்புழுக்களும் முதிர்ச்சி அடைந்து பருமனாக மாறும். இந்த அழுத்தத்தினால் பயிர் நீர் கடத்தும் குழாய்கள் ஒரு பக்கமாக தள்ளப்பட்டு அதிக பாதிப்பிற்கு உள்ளாகிறது. எனவே, நீர் மற்றும் சத்துப் பொருட்களைக் கிரகிக்க முடியாமல் பயிர் வாட்டத்துடன் காணப்படும்.

பெண் நூற்புழுக்களிலுள்ள ஜெலாட்டின் கூட்டினுள் 200 முதல் 300 முட்டைகளை உற்பத்தி செய்கிறது.

அவரை விதை வடிவ நூற்புழு:

இந்நூற்புழுக்கள் பருத்தி, அவரை, பப்பாளி, ஆமணக்கு சாகுபடி செய்யப்படும் அனைத்து பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகின்றன. ஆங்காங்கு வளர்ச்சி குன்றி தென்படுவது இந்நூற்புழு தாக்குதலின் அறிகுறியாகும்.

துளைக்கும் மற்றும் வேர் அழுகல் நூற்புழு:

வேர் துளைக்கும் நூற்புழு பயிரின் திசுக்களை அழித்து சேதத்தை உண்டு பண்ணும். இவை வேரின் கார்டெக்ஸ் செல்களை துளைத்துக் கொண்டும் மற்றும் செல்களின் இடைவெளிகளிலும் உட்புகுந்து பாதிப்பை உண்டுபண்ணும். இதனால் வேர்பகுதி பாதிக்கப்பட்டு கருஞ்சிவப்பு கறைகளுடன் காணப்படும்.

இவ்வாறு தாக்கும் போது வேர் சிறுத்தல், வேர் வளர்ச்சி பாதிக்கப்பட்டு மண்ணில் பிடிப்பு இல்லாமல் இருக்கும்.

இதுபோன்றே இன்னும் முட்டைக்கூடு நூற்புழு, எலுமிச்சை நூற்புழுக்களும் பயிர்களைத் தாக்கும் காரணிகளாகும்.

click me!