பசு பெரும்பாலும் அது ஈனும் பாலுக்காகவே வீட்டு விலங்காக வளர்க்கப்படுகிறது.
பசுவினுடைய பால் பல சத்துக்கள் நிறைந்ததுள்ள காரணத்தினால் மனிதன் அதனை ஒரு முக்கிய உணவாகக் கொண்டுள்ளான்.
உலகம் முழுதும் 6௦௦ கோடி பேர் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை உட்கொள்கின்றனர்.
சுமார் 1.5 கோடி மக்கள் பால்பண்ணையை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.
** கவர்ச்சியான தோற்றத்துடன், திடமாகவும், அனைத்து பாகங்களும் ஒருங்கிணைந்து, அனைவரையம் கவரும் வகையில் இருக்க வேண்டும்.
** உடல் அமைப்பு உளி வடிவில் இருக்க வேண்டும்.
** கூர்மையான கண்கள், மெலிந்த கழுத்து பெற்றிருக்க வேண்டும்.
** மடி அடிவயிற்றுடன் நன்கு இணைந்து இருக்க வேண்டும்.
** மடியின் தோலின் இரத்தக் குழாய்கள் நன்றாக இருக்க வேண்டும்.
** மடியின் நான்கு பகுதிகளும் நன்கு பிரிந்து நல்ல காம்புகளும் இருக்க வேண்டும்.