சிறுதானியங்களி்ன் உள்ள நார்சத்து மற்றும் உயிர்ச் சத்துக்கள் இன்றி காணப்படும் பல நோய்களைத் தடுப்பதுடன் ஆரோக்கிய வாழ்விற்கும் உதவுகிறது.
சிறுதானியங்களை உபயோகித்து தயாரிக்கக் கூடிய உடனடி உணவு வகைகளை மால்ட், அவல் மற்றும் சிற்றுண்டிகளை செய்து தொழில் ரீதியாக வருமானத்தைப் பெருக்கலாம்.
இந்த நவீன பரபரப்பான உலகில் மக்கள் அனைவரும் சிற்றுண்டி வகைகளையே விரும்பி உண்கிறார்கள்.
அதனை சிறுதானியங்களைப் பயன்படுத்தி செய்யப்படும் சிற்றுண்டி வகைகள் அனைத்தும் குறைந்த செலவில் நிறைந்த சத்து உள்ளதாகவும், சுவைமிக்கதாகவும் இருக்கும்.
இவ்வகை சிறுதானிய உணவுகளை மக்கள் விரும்பி உட்கொள்வதன் மூலம் சிறுதானிய உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.
சிறு தானியங்களைப் பதப்படுத்தி அவல், பொரி, நூடுல்ஸ், சிறு குழந்தைகளுக்கான அடுமனைப் பொருட்கள் போன்ற உணவு பொருட்கள் தயாரிக்கலாம்.
மேலும் நம் பாரம்பரிய உணவுகளான போலி, அப்பம், அதிரசம் போன்ற உணவு வகைகளும் தயாரிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு தொடர்பு முகவரி : முதல்வர், மனையியல் கல்லுரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், விவசாயக் கல்லூரி வளாகம், மதுரை – 625 104.
பனிவரகு சர்க்கரை பொங்கல்:
தேவையான பொருட்கள்: பனிவரகு 1 கப், பாசிப்பருப்பு 1/4 கப், வெல்லம்3/4 கப், ஏலப்பொடி1/4 தேக்கரண்டி, நெய் 2 மேசைக்கரண்டி, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை தேவைக்கேற்ப.
செய்முறை:
பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வாசனைவரும் வரை வறுத்துக் கொள்ளவும். சுத்தம் செய்த பனிவரகு, பாசிப்பருப்பு, தேவையான நீர் சேர்த்து வேக விடவும்.
வெல்லத்தைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். வெந்த பனிவரகு பாசிப்பருப்பு கலவையில் வெல்லம் சேர்த்துக் கிளறி கொதிக்க விடவும்.
ஏலப்பொடி, நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை சேர்க்கவும். நெய் சேர்த்துக் கிளறி பரிமாறவும். தகவல் : கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார், சென்னை – 600 041.
மானாவாரியில் மண் மற்றும் ஈரப்பதம் காக்கும் தொழில்நுட்பங்கள்:
கோடை உழவு, ஆழச்சார் அகலப் பாத்தி மற்றும் பயிர்கழிவு மேலாண்மை. கோடை உழவு கோடை மழைக்கு முன் (அ) முதல் மழையிலிருந்து பயன்படுத்தி மண்ணை புரட்டி விடும்.
சட்டி (அ) மோல்டு போர்டு கலப்பை பயன்படுத்துதல். ஆழச்சார் அகலப்பாத்தி மானாவாரி கரிசல் நிலத்திற்கு ஏற்றது. நீர் தேங்குவதை தடுத்து எளிதில் நீர் வடிய உதவுகிறது.
பயிர்க் கழிவுகளை தட்டை, வைக்கோல் போன்றவைகளை அதே நில மறுசுழற்சி செய்வதால் உரச்சத்தின் பயன் பாட்டுத்திறன் அதிகரிக்கிறது.