கறவை மற்றும் பண்ணை வேலைக்கான இனங்கள்…

 |  First Published Oct 16, 2016, 3:53 AM IST



 

கறவைக்கான இனங்கள்:

Latest Videos

undefined

1. ஓங்கோல்:

ஆந்திர மாநில நெல்லூர், கிருஷ்ணா, கோதாவரி மற்றும் குண்டூர் மாநிலங்களில் அதிகமாகக் காணப்படுகிறது.

பால் உற்பத்தி - 1500 கிலோ

வண்டி இழுப்பதற்கும், உழவிற்கும் காளை மாடுகள் ஏற்றதாகும்.

2. ஹரியானா

கர்னால், ஹிசார் மற்றும் குர்கான் மாவட்டங்கள் (ஹரியானா), டெல்லி மற்றும் மத்திய பிரதேசம்

பால் உற்பத்தி : 1140 - 4500 கிலோ

வேகமான உழவிற்கும், சாலை போக்குவரத்திற்கும் காளை மாடுகள் ஏற்றதாகும்.

3. கங்ரெஜ்

குஜராத் மாநிலத்தில் அதிகம் காணப்படுகிறது.

பால் உற்பத்தி - கிராம சூழல் : 1300 கிலோ - வணிக பால் பண்ணை : 3600 கிலோ

36 - 42 மாதம் முதல் ஈனுகிறது.

கறவை கால இடைவெளி: 15 - 16 மாதங்கள்

காளைகள் திடமாகவும், வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் வேலை செய்யக்கூடியவை.

4. டியோனி

ஆந்திர மாநில வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.

பசுக்கள் கறவைக்கும், காளைகள் பண்ணை வேலைக்கும் ஏற்றதாகும்.

பண்ணை வேலைக்கான இனங்கள

1. அம்ரித்மஹால்

கர்நாடகாவில் அதிகம் காணப்படுகிறது.

உழவிற்கும், போக்குவரத்திற்கும் நன்கு ஏற்றதாகும்.

2. ஹல்லிகார்

கர்நாடகாவின் டும்கூர், ஹாசன், மைசூர் மாவட்டங்களில் அதிகம் காணப்படுகிறது.

3. காங்கேயம்

தமிழ்நாட்டின் கோயமுத்தூர், ஈரோடு, நாமக்கல், கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அதிகம் காணப்படுகிறது.

உழவிற்கும், போக்குவரத்திற்கும் ஏற்றதாகும். நல்ல கடுமையான சூழ்நிலையை தாங்குகிறது.

click me!