விவசாயிகளுக்கு ஒரு நல்ல செய்தி! வயல்களை சுத்தப்படுத்தும் நுண்ணுயிர் தொழில்நுட்பம்!

Published : Jun 04, 2025, 05:34 PM IST
Rice

சுருக்கம்

ஓஸ்மானியா பல்கலைக்கழகம் பூச்சிக்கொல்லி மாசுபாட்டை நீக்கும் புதிய நுண்ணுயிர் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளது. இந்த நுண்ணுயிர்கள் மூன்று வாரங்களில் 90% ரசாயனங்களை நீக்குகின்றன, இது மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

விளைச்சலை அதிகரிக்கும் நோக்கில் விளைநிலங்களில் தற்போது அளவுக்கு அதிகமாக பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் ராசாயணங்கள் பயன்படுத்தப்படுவது நடைமுறையில் உள்ளது. அவரை காய்கறிகளை மட்டுமல்லாமல் நிலத்தையும் ரசாயாண பூமியாக மாற்றி விடுகிறது. ஒரு சிலர் மட்டுமே ஆர்கானிக் விவசாயத்தை செய்து வரும் நிலையில், அதற்கு போதிய விலை கிடைக்காததால் அவர்களும் அதனை தொடர்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இயற்கை விவசாயத்திற்கு திரும்பும் விவசாயிகள்

இந்த நிலையில் ஆர்கானிக் அல்லது இயக்கை விவசாயத்தை ஊக்கிவிக்கும் வகையில் பல்வேறு சமூக நல அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கலத்தில் இறங்கியுள்ளன.அவை விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் இயற்கை விவசாயத்தின் நீண்டகால பலன்கள் மற்றும் அதனால் கிடைக்கும் ஆரோக்கியத்தின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. செயற்கை உரங்களை பயன்படுத்துவதால் நிலத்தின் வளம் பாதிக்கப்படுவதுடன் அதன் தாக்கம் பல ஆண்டுகள் தங்கிவிடும் சூழல் உள்ளது.

உதவி செய்யும் நுண்ணுயிர் தொழில்நுட்பம்

விவசாயிகளுக்கு ரைசோபியம் உள்ளிட்ட நுண்ணுயிர்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் நிலையில் அவரை மகசூலை அதிகப்படுத்தும் காரணியாக திகழ்கிறது. ஆனால் தற்போது ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறை கண்டுபிடித்துள்ள புதிய நுண்ணுயிர் செயல்முறை நிலத்தில் உள்ள ரசாயணங்களை அப்படியே நீக்கிவிடும். அதுவம் மூன்றே வாரங்களில் நிலத்தில் உள்ள 90 சதவீத ரசாயணங்களை நீக்கிவிடும் என வேளாண் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய நுண்ணுயிர் தொழில்நுட்பம் அறிமுகம்

ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறை, இந்திய வேளாண்மையில் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படும் புதிய நுண்ணுயிர் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. பூச்சிக்கொல்லி மருந்துகளால் மாசுபட்ட மண்ணில் உள்ள மீதி ரசாயனங்களை 90% வரை குறைக்கும் திறன் கொண்ட இந்த நுண்ணுயிர் செயல்முறை, மூன்று வாரங்களில் இந்த முடிவை அடைய முடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

ப்ரொஃபெசர் சந்தீப்தா புர்குலா தலைமையில் நடைபெற்ற இந்த மூன்று ஆண்டுகால ஆய்வில், அதிக அளவில் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்ட விவசாய நிலங்களில் இருந்து 12 வகையான நுண்ணுயிர்கள் தனிமைப்படுத்தப்பட்டன. அவற்றில் 5 நுண்ணுயிர்கள், சைபர்மெத்ரின், குளோர்பைரிபோஸ் போன்ற ஆபத்தான பூச்சிக்கொல்லிகளை விரைவாக சிதைக்கும் திறன் கொண்டவை எனத் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த நுண்ணுயிர்கள், பூச்சிக்கொல்லிகளை சிதைக்கும் எஸ்டரேஸ், டிஹைட்ரோஜினேஸ் போன்ற நுண்ணுயிர் நொழிவிகளை (enzymes) உற்பத்தி செய்து, மண்ணில் உள்ள ரசாயனங்களை குறைக்கின்றன. இதன் மூலம், மண்ணின் நச்சுத்தன்மை குறைந்து, பயிர்களின் வளர்ச்சிக்கும், நிலத்தின் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

விவசாயத்திற்கு கைகொடுக்கும் புதிய நுண்ணுயிர்

புதிய நுண்ணுயிர் தொழில்நுட்பம், இந்தியாவில் பூச்சிக்கொல்லி பயன்பாட்டால் ஏற்பட்டுள்ள மண்ணின் மாசுபாட்டை குறைக்கும் ஒரு திறமையான தீர்வாக இருக்கலாம். மிகவும் குறைந்த செலவில், இயற்கை முறையில் மண்ணை சுத்திகரிக்க இது உதவுகிறது. இந்த கண்டுபிடிப்பு, இந்திய வேளாண்மையில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. பயிர்களின் தரம், மண்ணின் ஆரோக்கியம், மற்றும் விவசாயிகளின் வருமானம் ஆகியவற்றை மேம்படுத்த இது உதவும். இந்த நுண்ணுயிர் தொழில்நுட்பம், இந்தியாவின் வேளாண்மையில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Farmer: விவசாயிகளே, மழை வருதுன்னு பயப்படாதீங்க! பயிர்களை காப்பாற்றும் 10 ஸ்மார்ட் டிப்ஸ் இதோ.!
Training For Farmer: லட்சங்களில் வருமானம் தரும் தக்காளி சாஸ், ஜாம் உற்பத்தி! தக்காளியில் மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிப்பு பயிற்சியை மிஸ் பண்ணாதீங்க