தென்னையின் மகசூலை பாதிக்கும் பூச்சிகளை ஒழிக்கும் முறைகள்…

 |  First Published Jun 29, 2017, 12:47 PM IST
Methods for eradicating pests that affect the yield of coconut ...



காண்டா மிருக வண்டு

காண்டா மிருக வண்டு விரியாத குருத்து, மலராத பாளை முதலியவற்றை கடித்து உண்ணும்.

Latest Videos

undefined

இதைக் கட்டுப்படுத்த எருக் குழிகளில் பச்சை மஸ்கார்டினே பூசணத்தை இட்டு, இளம் புழுக்களை அழிக்கலாம். பாதிக்கப்பட்ட மரத்தில் உள்ள வண்டு துளைத்த ஓட்டை வழியாக இரும்புக் கம்பியை செலுத்தி வண்டை எடுக்க வேண்டும்.

மரத்தில் உள்ள துளைகளில் 1-2 செல்பாஸ் மாத்திரைகளை இட்டு களி மண்ணினால் மூடி விட வேண்டும். மட்டைகளின் அடி பாகத்தின் 45 நாட்கள் இடைவெளியில் 2 நாப்தலின் உருண்டைகளை வைத்து மண்ணால் மூடி இதனை கட்டுப்படுத்தலாம்.

கருந்தலைப்புழு:

இலை மடிப்புகளில் இப்புழுக்களால் தாக்கப்பட்ட மரங்கள் நோயுற்றது போல் காணப்படும்.

அதிகம் பாதிக்கப்பட்ட மரங்களின் இலைகள் காய்ந்து, தீய்ந்து தொங்குவதுடன் குறும்பைகளும் உதிரும். இலை மடிப்புகளில் புழுக்களின் கழிவுப் பொருளும் சக்கையும் ஒட்டிய, நூலாம் படை நூலில் இருந்து பச்சையத்தை சுரண்டி தின்னும். 2 கி. மாலெத்தியான் தூளை 1 லிட்டர் தண்ணீரில் கரைத்து ஓலைகளின் அடி பாகம் நன்றாக நனையும்படி கைத் தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.

சேதப்படுத்தப்பட்ட இலைகளையும், மட்டைகளையும் நீக்கி அழிக்க வேண்டும். அதனுள் 5மி.லி நுவக்ரான் மருந்தை உட்செலுத்தி சரிபார்த்து மூடவும். பைட்டலான் மருந்து கலந்து கலவையை செலுத்து முன் எல்லா காய்களையும் பறித்து விட வேண்டும்.

இம்முறை இப்புழுவினால் அழிவு அதிகமாக இருந்தால் மட்டும் மேற்கொள்ள வேண்டும். மேலும் இப்புழுக்களின் பெருக்கத்தை தடுக்க அவைகளைத் தாக்கும் ஒட்டுண்ணிகளை 15 நாட்களுக்கு ஒரு முறை தோப்பில் விட்டு கூட்டுப் புழுவை அழிக்கலாம்.

click me!